Thursday, 1 November 2018

*சத்துணவு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதுடன், சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டறிக்கை வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post.html


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை, பொதுச்செயலாளர் ச.மயில், மாநிலப்பொருளாளர் க.ஜோதிபாபு ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை*



*⭐வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்பப்பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கவேண்டும், பணிக்கொடை மற்றும் உணவு மானியத்தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25.10.2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் ஆகியோரது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும்.*



*⭐கடந்த அக்டோபர் 25 முதல் 27 முடிய காத்திருப்புப் போராட்டத்திலும், 29.10.2018 முதல் தொடர் மறியல் போராட்டத்திலும் நெஞ்சுரத்தோடு தொடர்ந்து போராட்டக்களத்தில் நின்றுகொண்டிருக்கும் சத்துணவு ஊழியர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.*



*⭐கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக்குறைந்த ஊதியத்தில், எதிர்கால வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமற்ற நிலையில் பணியாற்றிவரும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவர்களது போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுவது என்பது அரசின் ஊழியர் விரோதப்போக்கையே எடுத்துக்காட்டுகிறது.*



*⭐அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படாத நிலையில் தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டு என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: