*பத்திரிக்கைச் செய்தி - பள்ளியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் இல்லை. மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புகார்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/6.html
*⭐தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் துப்புரவு பணிக்கு ஆட்கள் நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் துப்புரவு பணிக்கு அரசு நிதி ஒதுக்கி கடந்த ஜனவரி 2016 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் ஊரக வளர்ச்சி துறையின் மூலம், பள்ளி மேலண்மை குழுவின் (School Management Committee) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதன் பின் தலைமையாசிரியர்கள் அந்த ஊதியத்தை வங்கியிலிருந்து எடுத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (Panchayat level Federation) மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் வங்கி கணக்கின் மூலம் ஊதியம் வழங்கப்படும். சிங்கம்புணரியில் சில பள்ளிகளுக்கு மட்டும் ஊதியம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா புகார் எழுந்துள்ளது.*
*⭐இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*⚡மாநிலத் துணைத் தலைவர் _ஜோசப்ரோஸ்,_*
*⚡மாவட்டத்தலைவர் _தாமஸ் அமலநாதன்,_*
*⚡மாவட்டச் செயலாளர் _முத்துப்பாண்டியன்,_*
*⚡மாவட்ட பொருளாளர் _குமரேசன்,_*
*⚡மாநில செயற்குழு உறுப்பினர் _புரட்சித்தம்பி,_*
*ஆகியோர் கூட்டாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்களை நேரிடையாக சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியாதவது.*
*⭐பள்ளி மேலண்மைக்குழுவின் மூலம் நியமிக்கப்படும் துப்புரவு பணியாளர்கள் பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் கழிப்பறையை சுத்தம் செய்வர். இதில் தொடக்கப்பள்ளிகளுக்கு ஒரு மாதத்திற்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ750ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ300ம் என மொத்தம் ரூ1050 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல நடுநிலைப்பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ1000ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ500ம் என மொத்தம் ரூ1500ம், உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ1500 உடன் ரூ750 சேர்த்து மொத்தம் ரூ2250 எனவும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ2000த்துடன் ரூ1000 சேர்த்து மொத்தம் ரூ3000 என ஒதுக்கீடு செய்து அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஊதியமானது ஜனவரி 2018 முதல் 300 முதல் 1000 வரை பள்ளிகளின் வகைக்கேற்ப உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.*
*⭐ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது. இதில் தலைவர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் இணைந்து கூட்டாக வங்கியில் கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. துப்புரவு நிதியானது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அதன்பின் தலைமையாசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழுவை கூட்டி உரிய தீர்மானம் நிறைவேற்றி அதனடிப்படையில் வங்கிக்கு சென்று கூட்டாக பணம் எடுக்க வேண்டும். எடுத்த பணத்தில் துப்புரவு பொருட்களுக்கு உரிய தொகையை மட்டும் தலைமையாசிரியர்கள் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியரின் ஊதியத்தை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் (PLF) வங்கி கணக்கில் நேரடியாக சென்று செலுத்த வேண்டும். அதன் பின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.*
*⭐சிங்கம்புணரி ஒன்றியத்தில் 67 தொடக்க நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. கடந்த மார்ச் 2018 வரை சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் இப்பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. ஏப்ரல் 2018 க்கு பின்னால் சிங்கம்புணரி பேரூராட்சி எல்கைக்கு உட்பட்ட பள்ளி எண் 1 முதல் 6 வரையுள்ள பள்ளிகளுக்கு ஊதியம் வழங்க இயலாது என நிறுத்திக்கொண்டது. பேரூராட்சி எல்லைக்கு உட்பட்டு இருப்பதால் பேரூராட்சி அலுவலகம் மூலம்தான் வழங்க முடியும் என ஊராட்சி அலுவலகம் விலகிக்கொண்டது. பேரூராட்சி அலுவலகமோ தங்களுக்கு உரிய உத்தரவு எதுவும் வரவில்லையென ஊதியம் வழங்க மறுக்கிறது. இதனால் கடந்த 6 மாத காலமாக தலைமையாசிரியர்கள் தங்களது சொந்த பணத்தில் இருந்து ஊதியம் வழங்கி வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பணியாளருக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.*
*⭐மேலும் சிவகங்கை, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஒன்றியங்களில் உள்ள வீட்டு வாடகைப்படி குறைபாடுகளை நீக்கும் விதமாக அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும், மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 3 அன்று அறிவித்துள்ள பள்ளி வேலை நாளை வேறொரு நாளில் மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது.*
*⭐உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.*
*⚡இப்படிக்கு,*
*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச் செயலாளர்,*
*சிவகங்கை.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment