*போராடும் சத்துணவு ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_2.html
*போராடும் சத்துணவு ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்*
*⚡இடம் : அனைத்து வட்டாட்ச்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம் மாவட்டம்.*
*⚡நாள்:- 2-11-18*
*⚡நேரம்:- மாலை நேர ஆர்ப்பாட்டம்*
*_அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்_*
*⭐தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா்கள், உதவியாளாகள் தரப்படுத்தப்படாத ஊதிய முறையில் ஊதியம் பெற்று உழன்று வருகின்றனா்.*
*⭐இவா்களின் உழைப்பு முறையான ஊதியமின்றி பல ஆண்டுகளாக சுரண்டப்பட்டு வருகிறது. இவா்கள் எவ்வித பணி நன்மைகளும் இல்லாமல் பணி செய்து வருகின்றனா்.*
*⭐தங்களுக்கு, தரப்பட்ட, முறையான ஊதியம் நிா்ணயம் செய்யப்பட வேண்டுமென்று இவா்கள் கடந்து 30 ஆண்டுகளாக அரசுக்கு கோாிக்கை வைத்தும் போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனா்.*
*⭐இவா்களின் ஊதியத்தை வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வுதியம் நிா்ணயம் செய்து வழங்கிட அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.*
*மேலும் இவா்களுடைய போராட்டங்களின் மூலமாக*
*⭐சத்துணவு, அங்கன்வாடி மைய ஊழியர்கள் உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயித்திடவும், சத்துணவு சமையலுருக்கு தற்போதைய ஊதிய ஏற்ற நிலைக்கு ஏற்ப ஊதியத்தை நிா்ணயம் செய்ய வேண்டுமெனவும், சத்துணவு அமைப்பாளா்களின் பணிப்பொறுப்புகளை, அதாவது அவா்கள் மேற்கொள்ளும் பதிவேடுகளை பராமாித்தல், பணம் கையாளுதல் போன்ற பணிகளை கருத்தில் கொண்டு அவா்களுக்கு இளநிலை உதவியாளா் ஊதிய விகித்திற்கு இணையான ஊதியம் நிா்ணயிக்கப்பட வேண்டும் எனவும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.*
*⭐சத்துணவு ஊழியா்களின் நியாயமான கோாிக்கைகளை உணா்ந்த, முன்னால் முதல்வா் ஜெயலலிதா அவா்கள் சென்ற சட்டமன்றத் தோ்தலின் போது தொகுப்புதியம், மதிப்புதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்ற கூலி முறைகள் ஒழிக்கப்பட்டு முறையான காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற முக்கியமானதொரு வாக்குறுதியை அளித்தாா்.*
*⭐ஆனால் அதன்பிறகு தோ்தலில் வென்று தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. அரசு சொன்னபடி சிறப்புகாலமுறை ஊதியம் ஒழிக்கப்பட்டதாலும், தரப்படுத்தப்பட்ட ஊதிய ஏற்றமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட ஊதியம் போன்றவை வழங்கப்படாததாலும், மீண்டும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்திட வேண்டிய நிலை எழுந்தது. அந்த இடைவிடாத போராட்டங்களின் விளைவாக, போராட்டங்களில் உள்ள நியாயத்தை உணா்ந்த மறைந்த முன்னால் முதல்வா் ஜெயலலிதா அவா்கள் 19.02.2016 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சத்துணவு ஊழியா்களின் கோாிக்கைகள் பாிசீலிக்கப்படும் என தொிவித்தாா். ஆனால் இன்று வரை சத்துணவு ஊழியா்களின் ஊதிய நிா்ணயம் குறித்து எந்தவித அறிவிப்புகளும் இல்லை. தற்போதைய ஊதிய மாற்ற அறிவிப்பில் இது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருந்த சத்துணவு ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் அவா்கள் தங்கள் கோாிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் குதித்துள்ளனா்.*
*⭐மூன்று தலைமுறைகளாக தங்களுக்கு முறையான ஊதிய நிா்ணயம் செய்யப்பட வேண்டும், பிற அரசுத்துறை ஊழியா்களைப்போல் தங்களையும் கருத வேண்டும் என்ற அவா்களின் நியாயமான கோாிக்கைகளை எந்த அரசுகளும் முறையாகவோ கனிவாகவோ பாிசீலித்து அவா்களின் ஊதிய உயா்வுகளை நிா்ணயம் செய்யவில்லை.*
*⭐கோாிக்கைகளில் உள்ள நியாயத்தை ஒப்புக்கொண்டு அவற்றை பாிசீலிப்பதாக தொிவித்த மறைந்த முன்னால் முதல்வா் ஜெயலலிதா அவா்களின் வாக்குறுதியும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் சத்துணவு ஊழியா்கள் தங்களின் நியாயமான கோாிக்கைகளை நிறைவேற்றக்கோாி கடந்த 25.10.2018 முதல் தொடா்ந்து பின்வரும் இயக்கங்களை நடத்தி வருகின்றனா்.*
*⚔🛡25.10.2018 முதல் 27.10.2018 வரை காத்திருப்பு போராட்டம்*
*⚔🛡29.10.218 முதல் 30.10.2018 வரை மறியல் போராட்டமும், 31.10.2018 கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டமும் நடைப்பெற்றது.*
*⚔🛡இச்சூழலில் 30.10.2018 அன்று தமிழக அமைச்சா் மற்றும் உயா் அலுவலா்கள் பேச்சுவாா்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத சூழலில் மேலும் போராட்டம் தொடா்கிறது.*
*⭐இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வா் அவா்கள் தலையிட்டு போராடும் சத்துணவு ஊழியா்களின் நியாயமான கோாிக்கைகள் நிறைவேற்றும் பொருட்டு சங்கத்தின் மாநில நிா்வாகிகளை அழைத்துப்பேசி சுமூகத் தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*
*⭐மேலும் போராடும் சத்துணவு ஊழியா்களின் கோாிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் 02.11.2018 அன்று தமிழகம் முழுவதும் வட்டத் தலைநகரங்களில் ஆா்பாட்டம் நடத்த தெரிவித்துள்ளதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட தலைநகர் கரிலும் நாளை 2-11-18 ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.*
*⭐இந்த ஆர்ப்பாட்டதில் அரசு ஊழியர்கள் அனைவரும் பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு விழுப்புரம் மாவட்ட மையத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.*
*_⚡தோழமையுடன்;_*
*மாவட்ட நிர்வாகிகள்*
*TNGEA விழுப்புரம்*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment