*புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கி உதவிடக் கோரி தோழர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 19 நாள் : 20.11.2018*
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_20.html
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐கஜா புயலின் மிகக்கடுமையான தாக்குதலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மிகக் கோரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, குடிக்க நீரின்றி, தங்க வீடின்றி தவித்து வருகின்ற செய்திகள் எவரையும் நிலைகுலையச் செய்துவிடக் கூடியவை.*
*⭐பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த ஜந்து நாட்களாக மின்சாரம் இல்லைஇ குடிநீர் இல்லை. இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் நுhற்றுக்கணக்கான பள்ளிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். அனைத்தையும் இழந்து செய்வதறியாது திகைத்துவரும் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை விரைந்து செய்திட வேண்டும்.*
*⭐தமிழக அரசின் நிவாரண உதவிகள் மக்களுக்குப் போதுமான அளவில் இல்லை. தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் இன்னும் மக்களைச் சென்றடைவில்லை. மத்திய அரசு இதுவரை எவ்வித உதவியும் அறிவிக்காதது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.*
*⭐கஜா புயலின் பாதிப்பை “அதி தீவிரப் பேரிடர்” என்று அறிவித்து மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மின்னல் வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*⭐இதுபோன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் எப்போதுமே முன்னணியில் நிற்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இக்கட்டான இச்சூழலில் தனது உதவிக்கரத்தை நீட்டுவது மிகமிக அவசியமானது.*
*⭐எனவே நம் பேரியக்கத்தின் வட்டாரஇ நகரக் கிளைகள் இணையற்ற உதவும் உள்ளம் கொண்ட நம் இயக்க உறுப்பினர்களிடமும், நேச நெஞ்சம் கொண்ட ஆசிரியப் பெருமக்களிடமும் உதவிநிதி பெற்று மாவட்டக்கிளைகள் மூலம் மாநில அமைப்பிற்கு 23.11.2018 வெள்ளிக்கிழமைக்குள் ஒப்படைத்து உதவிட மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment