Tuesday, 20 November 2018

*கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் நிதியுதவி சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழங்கியது*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/11/50.html


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் _தோழர்.தாமஸ் அமலநாதன்_ தலைமையில் நடந்தது.*

*மாநிலத்துணை தலைவர் _தோழர்.ஜோசப்ரோஸ்,_*

*மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர்.புரட்சித்தம்பி_ முன்னிலை வகித்தனர்.*

*மாவட்டச் செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்_ தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார்.*

*மாவட்டப் பொருளாளர் _தோழர்.குமரேசன்,_ மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் _தோழர்.ஆரோக்கியராஜ்,_ _தோழர்.சிங்கராயர்,_ _தோழர்.ஞான அற்புதராஜ்,_  மாவட்ட துணைச் செயலாளர்கள் _தோழர்.ரவி,_ _தோழர்.ஜெயக்குமார்,_ _தோழர்.ஜீவா ஆனந்தி,_ மாவட்டத் துணைத்தலைவர் _தோழர்.மாலா,_  உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*



*_கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன._*



*⭐தமிழ்நாட்டில் கஜா புயலால் நாகபட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு வாழும் மக்கள் அடிப்படை வசதியின்றி அவதியுறுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக முதல் கட்ட நிதியாக ரூ.50,000 வழங்குவது என தீர்மானிக்கப்பட்டு உடனடியாக  மாநிலத் துணைத்தலைவரிடம் 50 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது.*



*⭐இடைநிலை ஆசிரியர்களின் பறிக்கப்பட்ட ஊதியம் மீட்பிற்காக நவம்பர் 26 அன்று சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெறும் ஊதியக்குழு அரசாணை எரிப்புப் போராட்டத்தில் தற்செயல் விடுப்பு எடுத்து அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது எனவும்,*


*⭐பள்ளி வளாகத்திற்குள் உள்ள மரங்கள், பழுதடைந்த கட்டிடங்கள் கஜா புயலால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இது மாணவர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்,*


*⭐7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற உள்ள தொடர் வேலை நிறுத்தத்தில் கூட்டணியின் சார்பில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது,*


*⭐மாவட்ட கல்வி அலுவலகங்களில் தேங்கியுள்ள தேர்வு நிலை, சிறப்பு நிலை, பணிவரன்முறை மற்றும் முன் அனுமதி கோப்புகளை விரைந்து முடிக்க நடடிவக்கை எடுக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: