*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அரசாணை எரிப்புப் போராட்டம்-பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_23.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 20 நாள் : 23.11.2018*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 26.11.2018 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெற உள்ள வரலாற்று நிகழ்வான பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்தை களத்திலே நிகழ்த்துவதற்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளன. மாநிலம் முழுவதும் நம் இயக்கத்தின் வட்டார, நகர, மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்களும், முன்னணித் தோழர்களும் இரவு, பகல் பாராது களநிகழ்வை நோக்கி கண்துஞ்சாது களத்திலே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.*
*_“26.11.2018 அன்று அரசாணைகளை எரிக்கப்போவது தீக்குச்சியிலிருந்து எழும் நெருப்பல்ல; தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் கோப நெருப்பு”_*
*பத்தாண்டுகால அநீதிக்கு எதிரான உச்சகட்ட நிகழ்வே அரசாணை எரிப்புப் போராட்டம். கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நாம் திட்டமிட்டு தமிழகம் முழுவதும் வட்டார அளவில், மாவட்ட அளவில், மண்டல அளவில், மாநில அளவில் கள ஆயத்தங்கள் செய்து இன்று போராட்டக்களத்தை நெருங்கியிருக்கிறோம்.*
*⭐எதிர்பாராமல் வந்த கஜா புயல் தமிழக மக்களுக்கு சொல்லொணாத் துயரை அளித்து விட்டுப் போயிருக்கிறது. ஈடு செய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள நம் சகோதரர்களுக்கு உதவி செய்வது நம் தலையாய கடமை என்பதை உணர்ந்து நம் இயக்கத் தோழர்கள் மாநிலம் முழுவதும் உதவி நிதி திரட்டுகிற பணியிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*
*⭐பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நம் இயக்கத் தோழர்களின் உதவிப் பணிகள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வீரமிக்க இயக்கம் மட்டுமல்லஇ ஈரமிக்க இயக்கம் என்பதையும் நிரூபிப்பதாக உள்ளது.*
*⭐இச்சூழலில் தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றிலே 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிச்சங்க நடவடிக்கையாக நம் பேரியக்கம் நடத்துகிற ஆணை எரிப்புப் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற நம் சகோதர சங்கங்களின் முயற்சி இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.*
*_“களத்திற்கு வாருங்கள்; இப்போராட்டத்தை இணைந்தே நடத்துவோம்”_*
*என்று நாம் அழைத்தபோதும் அதையும் ஏற்காத நம் சகோதரர்களின் உள்ளக்கிடக்கையை நம்மால் உணர முடிகிறது. வெற்றுக் கூச்சல்கள் நம் கவனத்தைச் சிதறடித்து விடக்கூடாது என்பதில் நம் தோழர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.*
*_“பந்தயக்குதிரை ஓடும்போது ஓடுதளம் அருகிலுள்ள புல்லையோ கொள்ளையோ பார்ப்பதில்லை, ஏனெனில் அது தன் வெற்றி இலக்கை மட்டுமே மனதில் கொண்டு ஓடுகிறது”_*
*என்பதை நம் தோழர்கள் உணர்ந்து பணியாற்ற வேண்டிய நேரமிது. எனவே, எழுகின்ற அத்தனை தடைகளுக்கும் விடை கூறுகிற நாளாக நவம்பர் 26 அமைந்திட வேண்டும்.*
*⭐எவரையும் நம்பி நாம் களத்திலே நிற்கவில்லை. நாம் பயணிக்கும் களத்தின் மீதும் நம் பலத்தின் மீதும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது.*
*_“நம்பிக்கை நிறைந்த ஒருவன் யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவது இல்லை”_*
*என்ற டாக்டர் _அப்துல்கலாமின்_ வரிகளுக்கேற்ப நாம் களத்தில் நிற்கிறோம்.*
*⭐நவம்பர் 26-ல் நடப்பது சாதாரணப் போராட்டமல்ல. அது ஒரு நவம்பர் புரட்சி. பூங்கொத்துகளைக் கொண்டே புரட்சி செய்துவிட முடியும் என்று நம்புகிறவர்களல்ல நாம். உலக வரலாற்றில் போராட்டக்களங்களில் நிகழ்ந்த சேதாரங்களே வரலாற்று ஆதாரங்களாக அணி சேர்த்துக் கொண்டிருக்கின்றன என நம்புபவர்கள் நாம்.*
*_“ தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்”_*
*என்றான் புரட்சியாளன் _பிடல் காஸ்ட்டிரோ._*
*⭐தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் தடம் பதிக்கிற போராட்டம் தான் நவம்பர் 26. தடம் பதிக்கிற இப்போராட்டத்தில் புடம்போட்ட தங்கங்களாய் நம் இயக்க தோழர்கள் பங்கேற்க வேண்டும். தங்கத்தை அனலில் இட்டாலும், தனலில் இட்டாலும், புனலில் இட்டாலும் மணலில் இட்டாலும் அதன் தன்மை மாறாது. எத்தனை எத்தனை இழப்புகள் வந்தாலும் நம் இயக்க தோழர்களின் போர்க்குணமும், பொதுநல நோக்கும் மாறாவே மாறாது.*
*⭐நம் ஆணை எரிப்புப் போராட்டம் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளில் இடைநிலை ஆசிரியர் ஊதியக் கோரிக்கையை தனிக் கோரிக்கையாகப் பட்டியலிட வைத்தது. இன்று ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளில் அது இரண்டாவது கோரிக்கையாக எழுந்து நிற்கிறது.*
*⭐ஒரு நபர்க் குழுவே இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனையை தீர்த்துவிடும் என்று நம்பிய நம் சகோதரர்கள் கூட இன்று களம் கண்டாலே நலம் காணமுடியும்இ பலன் காண முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஒவ்வொரு இயக்கமும் தன் இயல்பிற்கேற்ப போராட்டக் களங்களை அமைப்பது இயல்பு. எனவே, போராட்டங்களை நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. எத்தகு நிலையில் எத்தகு வடிவில் போராடினாலும் உரிமை மீட்புப் போராட்டங்களை நாம் வரவேற்போம்.*
*⭐எனவே, இருக்கின்ற இரண்டு தினங்களிலும் நம் இயக்கத் தோழர்கள் இமைப்பொழுதும் சோராது களப்பணியாற்ற வேண்டும்.*
*⭐02.08.1984ல் தோன்றிய நம் பேரியக்கம் கடந்த 34 ஆண்டுகளில் எத்தனையோ களப் போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது.*
*⭐களம் நமக்குப் புதிதல்ல, இருப்பினும், 26.11.2018 என்பது நம் இயக்க வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லை எட்டுகிற நாள். நம் இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் களத்திற்கு கொண்டுவரும் கடமையைக் கண்துஞ்சாது ஆற்றிட நம் பேரியக்கத் தோழர்களை மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது.*
*“ நல்ல குறிக்கோளை அடைவதற்காகதொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது”*
*- மாமேதை* *_காரல் மார்க்ஸ்_*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment