*ஆணை எரிப்பு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையத்தின் சில முக்கிய வழிகாட்டுதல்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_25.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 21 நாள் : 25.11.2018*
*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*
*_அனைவருக்கும் புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்கள்!_*
*⭐வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை எரிப்புப் போராட்டம் நடைபெற இன்னும் சிலமணி நேரங்களே உள்ளன.*
*“இவ்வுலகில் ஒரு குறிக்கோளை அடையவேண்டுமென்று ஒருவன் முடிவெடுத்து விட்டால் இவ்வுலகில் உள்ள யாராலும் அதைத் தடுத்து நிறுத்திட முடியாது”*
*என்ற சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கேற்ப நம்முடைய களப்பணிகள் மாநிலத்தின் மூலை முடுக்களிலெல்லாம் நேர்த்தியோடும், தீர்மானித்த இலக்கை நோக்கியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.*
*⭐1985இ 1988 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு ஊதியம்கோரி ஜேக்டீ மற்றும் அரசு ஊழியர் பேரமைப்புகளின் சார்பில் ஆணை எரிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டபோது நம் முன்னோர்கள் போர்க்குணத்தோடு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோரிக்கையை வென்றெடுத்த வரலாறு நடந்தது. அவ்வாறு போராட்டக்களம் கண்டவர்கள் அதன் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.*
*⭐அவ்வழியில் இடைநிலை ஆசிரியர்களின் பறிக்கப்பட்ட ஊதியத்தை மீட்பதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்படுத்தித் தந்துள்ள துணிச்சலான இந்த போர்க்களத்தை தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினம் பயன்படுத்தி கோரிக்கைகளை வென்றெடுக்கும் களப்போரில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது. நாளைய போராட்டக்களத்தை வடிவமைப்பதில் மாவட்டப் பொறுப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் கீழ்க்கண்டவாறு செயல்பட மாநில மையம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.*
*⭐ஆணை எரிப்புப் போராட்டத்தில் நம்மோடு இணைந்துள்ள நம் சகோதரச் சங்கங்களான JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) ஆகிய இயக்கங்களின் தோழர்களைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.*
*⭐போராட்டக்களத்தில் வாழ்த்துரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் STFI இணைப்புச் சங்கங்கள் உள்ளிட்ட நம் தோழமைச்சங்கப் பொறுப்பாளர்களை அழைத்துக் கொள்ள வேண்டும். போராட்டக் களத்தில் போராட்டத்தை விவரிக்கும் பேனர் ஒன்றை தயார் செய்து பயன்படுத்த வேண்டும்.*
*⭐நம் பேரியக்கத்தின் வண்ண மணிக்கொடிகளை ஏந்தி இயக்க உறுப்பினர்கள் களத்தில் நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.*
*⭐ஏற்கனவே மாநில மையத்தால் வழங்கப்பட்டுள்ள அரசாணைகளின் நகல்களை முன்கூட்டியே போராளிகளுக்கு வழங்கிட வேண்டும்.*
*⭐போராட்டக்களத்தில் எவ்வித வன்முறைச் சம்பவங்களுக்கும் அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடாமல், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கேயுரிய தனித்தன்மையோடும், இலக்கணத்தோடும் போராட்டக்களம் காணவேண்டும்.*
*⭐மேற்கண்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து எவ்விதக் கவனச் சிதறல்களுமின்றி போராட்டத்தை வெற்றிகரமாக்கிட மாநில மையம் நம் இயக்கப் பொறுப்பாளர்களையும், பேரியக்க உறுப்பினர்களையும் தோழமையுடன் வேண்டுகிறது.*
*_“ஆபத்தில் உதவாத நண்பன், அவசரத்துக்கு உதவாத சொந்தம், பசிக்கு உதவாத உணவு, தேவைக்கு உதவாத பணம் உரிமைக்குக் களம் காணாத சங்கம் இருந்தும் பயன் இல்லை”_*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment