Tuesday, 27 November 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_27.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 22 நாள் : 27.11.2018*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற மகத்தான நம் பேரியக்கம் நேற்று நடத்திய பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டம் தமிழகம் முழுவதும் பேரெழுச்சியோடு நடைபெற்றுள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சூழல் கருதி நாம் களம் காணவில்லை.*


*_“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலைஇ எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”_*

*என்ற பாடல் வரிகளுக்கேற்ப தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போர்க்கோலம் பூண்டு  நம் இயக்கத் தோழர்கள் நடத்திய அரசாணை எரிப்புப் போராட்டம் தமிழ்நாட்டின் ஆசிரியர் இயக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துவிட்டது. போராட்டக்களத்திற்கு வருகை தந்த அனைவருமே சிறைச்சாலைக்குச் செல்லும் ஏற்பாடுகளோடு வந்தது என்பதும், காவல்துறையின் கடும் அச்சுறுத்தல்களையும் மீறி களத்திற்கு வந்தது என்பதும், வருடத்தின் இறுதிநாட்கள் என்ற நிலையில் தற்செயல் விடுப்பு இல்லாத நிலையில் ஈட்டிய விடுப்பெடுத்து போராட்டக்களத்திற்கு வந்தது என்பதும், வேலைநாளில் துணிச்சலாகப் போராட்டக்களத்திற்கு வந்தது என்பதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வலிமையையும், இயக்க உறுப்பினர்களின் போர்க்குணத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.*



*⭐பாதி மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவே இல்லை. மீதி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்தாயிரத்தை தொட்டது என்பதும்,* 

*_“கைது செய்யப்படுவோம்இ சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவோம்”_*

*என்று தெரிந்தும் 20000-க்கும் மேற்பட்ட நம் இயக்கத் தோழர்கள் போராட்டக்களத்திற்கு வந்ததும் மிகவும் பாராட்டத்தக்க நிகழ்வுகள். புறநானூற்று வீரமங்கைகளாகப் போராட்டக்களத்திற்கு வருகை தந்தவர்களில் பெரும் பகுதியினர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.*



*⭐இக்களப்போரில் தங்களையும் இணைத்துக்கொண்டு பல மாவட்டங்களில் போராட்டத்தில் பங்கேற்ற நம் சகோதர அமைப்புகளான தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்(TIAS), (JSR)  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA)ஆகியவற்றின் பெருமைக்குரிய தோழர்களுக்கு மாநில மையம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.*


*⭐அதேவேளையில் நம் போராட்டத்தின் எழுச்சிகண்டு பொறுக்க முடியாத சில சங்கத்தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்துபவர்களைப் பற்றி நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. போராட்டங்களைக் கைவிடுவதற்கு காரணம் தேடுபவர்களுக்கு இன்றைய சூழல் வாய்ப்பாக அமைந்துள்ளது.*


*_“உரிமை பறிக்கப்படுகிற போதும், தன்மானம் பாதிக்கப்படுகிறபோதும் இழவு வீட்டில் கூட  போராடலாம். ஆனால் இழவு வீட்டில் பிடுங்கித்தான் திண்ணக்கூடாது”_*  *என்பதை நாம் சிலருக்குஉணர்த்த வேண்டிய அவசியம் ஏற்பப்பட்டுவிட்டது. சாக்குப்போக்குச் சொல்லித் தானும் போராடாமல், போராடுபவர்களையும் கொச்சைப்படுத்தும் இவர்களை தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினம் புரிந்துகொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.*



*⭐நேற்றைய (26.11.2018) போராட்டக்களத்தில் தீரத்துடன் பங்கேற்ற நம் இயக்கத் தோழர்களே! அடுத்து நாம் ஈரத்தோடு கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்கு உதவிடும் பணியை முழு மூச்சில் செய்யவேண்டியுள்ளது. ஏற்கனவேஇ பல மாவட்டங்களிலிருந்து வட்டாரக்கிளைகளே நேரடியாக அங்குள்ள நம் இயக்கத் தோழர்கள் மூலமாக பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர்.*


*⭐மாநில மையம் விடுத்த வேண்டுகோளின்படி மாவட்டக்கிளைகள் இதுவரை உதவிநிதியை மாநில மையத்தில் ஒப்படைக்காமல் இருந்தால் உடனடியாக ஒப்படைத்து உதவிட மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: