🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம்.*
https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_17.html
*⚡ _நாள் :_*
*16.12.2018*
*⚡ _இடம் :_*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகம், மதுரை*
*⚡ _தலைமை:_*
*_திருமதி.மூ.மணிமேகலை,_ மாநிலத்தலைவர்*
*⭐கூட்ட முடிவுகள்:*
*_தீர்மானம் : 1_*
*⚡உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பல்வேறு போராட்டக்காலங்களில் நமது இயக்கத்திற்கு உறுதுணையாக விளங்கியவருமான தோழர்.கோ.வீரய்யன் அவர்களின் மறைவிற்கு இம்மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*_தீர்மானம் : 2_*
*⚡தமிழ்நாடு அரசின் 7வது மற்றும் 8வது ஊதியக்குழுக்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை மீட்பதற்காக கடந்த 9 ஆண்டுகாலமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு சரிசெய்யப்படாத நிலையில், அதன் தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 26.11.2018 அன்று மாவட்டத்தலைநகரங்களில் நடத்திய அரசாணை எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி மற்றும் மேல்முறையீடு விதி 17(ஆ)-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள கல்வித்துறை முடிவு செய்திருப்பதை ஆசிரியர்களின் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும் எனவும், கோரிக்கையின் பேரில் ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்வதை கல்வித்துறை கைவிட வேண்டும் எனவும் இம்மாநிலச் செயற்குழு தமிழக பள்ளிக்கல்வித்துறையை வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம் : 3_*
*⚡ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்ட தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் உட்பட பல்வேறு மக்கள் நலக்கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 8, 9 ஆகிய இரு நாட்கள் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்தியப் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு STFI) முடிவெடுத்துள்ள நிலையில், அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் மேற்படி வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் : 4_*
*⚡ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான நீதிமன்ற வழக்கு 07.01.2019 அன்று விசாரணைக்கு வரும் நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்து, ஏற்கனவே ஜாக்டோ ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு தீர்மானித்தவாறு 08.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை நடத்திட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பை இம்மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம் : 5_*
*⚡கஜா புயலால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டார, நகரக்கிளைகள் நேரடியாக எழுபது லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை இதுவரை வழங்கியுள்ள நிலையில், இத்துயர் துடைக்கும் பணியில் மேலும் உதவும் பொருட்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10,00,000(ரூபாய் பத்துலட்சம் மட்டும்) அளித்திட இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் : 6_*
*⚡26.11.2018 அரசாணை எரிப்புப்போராட்டம் மற்றும் அது தொடர்பான பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர்கள் மீதான 17(ஆ) நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்டக்கிளைகளும் சிறப்புப் பொதுக்குழுக்களைக் கூட்டுவதெனவும், அக்கூட்டங்களில் மாநிலப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு விளக்க உரையாற்றுவது எனவும் இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் : 7_*
*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார ,மாவட்ட, மாநிலப்பொறுப்பாளர்களுக்கு 2019 மார்ச் மாதத்தில் சென்னையில் இரண்டு நாட்கள் “இயக்க பயிற்சி முகாம்” நடத்துவதெனவும், அதற்கு கட்டணமாக பங்கேற்கும் பொறுப்பாளர்களிடமிருந்து ரூ500-(ரூபாய் ஜநூறு மட்டும்) கட்டணமாக வசூலிப்பது எனவும் இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் : 8_*
*⚡கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாணவர்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தமிழக அரசு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக் கொள்கிறது.*
*_தீர்மானம் : 9_*
*⚡தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வது, அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது, தேசிய கல்விக்கொள்கை அறிவியல் மனப்பான்மையுடன் உருவாக்கப்படுதல், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 22 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு(STFI) உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகள் சார்பில் 19.02.2019 அன்று புதுதில்லியில் நடைபெறும் அகில இந்தியஅளவிலான “ SAVE CAMPUS SAVE EDUCATION & SAVE NATION” பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப்பொதுக்குழுவில் இடம்பெறும் அனைவரும் பங்கேற்பது எனவும் அதற்குரிய பயணத்திட்டத்தை மாநில மையம் விரைந்து அறிவிப்பது எனவும் இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் : 10_*
*⚡2019 ஆம் ஆண்டிற்கான இயக்க நாட்குறிப்பு, நாட்காட்டி, அரசாணைப்புத்தகம் ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்த விலை ரூ.250 (ரூபாய் இருநூற்று ஐம்பது மட்டும்) எனவும், தனித்தனி விலையாக நாட்குறிப்பு ரூ 100, நாள்காட்டி ரூ 50, அரசாணைப்புத்தகம் ரூ 100-எனவும் விலைநிர்ணயம் செய்து இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment