*கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 10,00,000 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழங்கியது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/1000000.html
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதியை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் பத்து லட்சம் ரூபாய்கான வங்கி வரைவோலை நேரில் அளிக்கப்பட்டது.*
*⭐இது தொடர்பாக சென்னையில் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை 17.12.2018 அன்று கூட்டணியின்*
*⚡மாநிலத்தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை,_*
*⚡மாநிலப்பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்,_*
*⚡மாநிலப்பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு,_*
*⚡துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்,_*
*⚡இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்_*
*ஆகியோர் மாநில அமைப்பின் சார்பில் பத்துலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலை அளித்தனர்.*
*⭐இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப்பொதுச்செயலாளர் ச.மயில், “கஜா புயலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டார, நகரக்கிளைகள் நேரடியாக எழுபது லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ள நிலையில், இத்துயர் துடைக்கும் பணியில் மேலும் உதவும் பொருட்டு மாநில அமைப்பின் சார்பில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பத்துலட்சம் ரூபாய் அளித்துள்ளோம்.*
*⭐மேலும், எங்களது இயக்க உறுப்பினர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்கவும் விருப்பம் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஆசிரியர் இயக்கங்களில் முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு பத்துலட்சம் ரூபாய் அளித்த இயக்கம் _“ உரிமைக்குக் குரல் கொடுப்பதிலும், உதவிக்கு கரம் கொடுப்பதிலும் எங்கள் இயக்கம் என்றும் முன்னணியில் நிற்கும்”_ என்று தெரிவித்தார்.*
*ஊடகச்செய்தி:*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment