*சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தொடர் அரசியல் தலையீட்டை எதிர்த்து டிச 21ல் ஆர்ப்பாட்டம். ஜாக்டோ ஜியோ பங்கேற்க முடிவு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/21.html
*⭐சிவகங்கை: அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.*
*⭐டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தத்தை நடத்துவதாக அறிவித்து இருந்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்திலும், மதுரை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.*
*⭐டிச 3ல் நடந்த விசாரனையில் நீதி மன்றம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இவ்வழக்கின் தொடர் விசாரனை கடந்த டிசம்பர் 10ஆம் தேதி மதுரையில் மீண்டும் நடந்தது.*
*⭐இதில் தமிழக அரசு ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் அறிக்கையையும், பென்சன் திட்டத்திற்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீதர் குழுவின் அறிக்கையையும் சீலிட்ட கவரில் வைத்து நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.*
*⭐21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகை பற்றிய தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அடுத்த கட்ட விசாரனை ஜனவரி 7 அன்று நடக்கும் என்றும் உத்தரவிட்டனர். இதனால் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ மீண்டும் ஒத்தி வைத்தது. இதற்கான நீதி மன்ற விளக்கக் கூட்டம் சிவகங்கையில்,*
*⚡மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் _முத்துப்பாண்டியன்,_ _நாகேந்திரன்_ தலைமையில் நடைபெற்றது.*
*⚡இணை ஒருங்கிணைப்பாளர்கள் _செல்வக்குமார்,_ _முத்துச்சாமி,_ _ரவிச்சந்திரன்_ முன்னிலை வகித்தனர்.*
*⚡மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் _சங்கர்_ கோரிக்கைகளை விளக்கி பேசினார்.*
*⚡மாநில ஒருங்கிணைப்பாளர் _பொன் செல்வராஜ்_ நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரனை குறித்து விளக்கமளித்தார்.*
*⚡இக்கூட்டத்தில் உறுப்பு சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*
*⭐சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறையில் அரசியல் தலையீடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.*
*⭐இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஊரக வளர்ச்சி துறையின் மாவட்ட திட்ட இயக்குனரையே அவரது அலுவலகத்தில் வைத்து தாக்கியது என்பது மாவட்ட ஆட்சித் தலைவரே பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வருவதையே காட்டுகிறது.*
*⭐எனவே மாவட்டத்தில் தொடர்ந்து வரும் அரசியல் தலையீட்டை கண்டித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் டிசம்பர் 21 அன்று மாலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டே ஜியோ தார்மீக ஆதரவு அளிப்பது என்றும், அந்த ஆர்ப்பாட்டத்தில் உறுப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.*
*_குறிப்பு:_*
*அனைத்து உறுப்பு சங்கங்களும் தங்களது உறுப்பினர்களை திரளாக பங்கேற்க செய்யவும்.*
*🤝தோழமையுடன்;*
*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*
*ஜாக்டோ ஜியோ,*
*சிவகங்கை மாவட்டம்*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment