Friday, 11 January 2019

*நீதிமன்ற உறுதியளிப்பைத் திரும்பப்பெற்றதையடுத்து சன.22 முதல் JACTTO-GEO காலவரையற்ற வேலைநிறுத்தம் : TNPTF பொதுச்செயலாளர் செய்தி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/22-jactto-geo-tnptf.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 3*

*நாள் : 11.01.2019*



*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்.*


*⭐ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (11.1.19) பிற்பகல் சென்னையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.*


*⭐அரசு தரப்பு வழக்கம் போல 4 வார அவகாசம் கேட்டது. நீதிமன்றம் 28.01.2019-ற்கு விசாரணையைத் தள்ளி வைப்பது குறித்து தெரிவித்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் கலந்து பேச அவகாசம் கொடுத்தார்.*


*⭐ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் கலந்து பேசிய ஜாக்டோ-ஜியோ தரப்பு வழக்கறிஞர் திரு.N.G.R.பிரசாத், "2017-ல் இருந்து நாங்கள் போராடி வருகிறோம். ஒவ்வொரு முறையும் நீதிமன்ற வழக்கு விசாரணையால் ஏமாற்றப்பட்டு வருகிறோம். எனவே அரசின் பதிலை ஏற்க முடியாது." என்று கூறினார்.*


*⭐மேலும், 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்குவதாக ஜாக்டோ-ஜியோ முடிவு செய்துள்ளது. எனவே, வழக்கு விசாரணை முடியும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்ற ஜாக்டோ-ஜியோ தரப்பு உறுதியளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.*


*⚡ 18.01.19 (வெள்ளிக்கிழமை) மாவட்ட  தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும்,*


*⚡ 20.01.19 (ஞாயிறு) திருச்சியில் ஜாக்டோ ஜியோ விரிவடைந்த மாநில உயர்மட்டக்குழு கூட்டமும்,*


*⚡ 22.01.19 (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்தத்துடன் வட்டார அளவில் ஆர்ப்பாட்டமும்,*


*⚡ 23 .01.19 முதல் 25.01.19 வரை வேலை நிறுத்தத்துடன் வட்டார அளவில் மறியலும்,*


*⚡ 26.01.19 (சனிக்கிழமை)மாநில உயர்மட்டக்குழு கூட்டமும் நடைபெற உள்ளதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளார்கள்.*



*⭐எனவே, ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ள 22.01.2019 முதலான காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தோழர்கள் அனைவரும் எண்ணிமுடியா தீரத்தோடே களம் காண தோழமையோடே கேட்டுக் கொள்கிறேன்.*



*🤝தோழமையுடன்,*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: