*விண்டோஸ் பயன்படுத்துவாருக்கு எச்சரிக்கை.. வாடிக்கையாளர்களைக் கைவிடும் மைக்ரோசாப்ட்..!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_17.html
*⭐உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் வாடிக்கையாளர்களுக்கு இனி சேவை அளிக்க முடியாது என அறிவித்துள்ளது.*
*⭐ஆம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பான விண்டோஸ் 7 இயங்கு தளத்திற்குச் சப்போர்ட் சேவையை 14 ஜனவரி 2020ஆம் ஆண்டு முதல் அளிக்க முடியாது என அறிவித்துள்ளது. ஏற்கனவே விண்டோஸ் 7க்கான அடிப்படை சேவையை நிறுத்திவிட்ட மைக்ரோசாப்ட் 2020 முதல் சேவையை முழுமையாக நிறுத்த உள்ளது.*
*⭐இந்நிலையில் விண்டோஸ் 7 தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் மைக்ரோசாப்ட் அப்கிரேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. மேலும் லைசென்ஸ் கொண்டுள்ளவர்கள் அனைவரும் எளிதாக விண்டோஸ் 10 தளத்திற்கு அப்கிரேட் செய்துகொள்ளலாம்.*
*⭐மைக்ரோசாப்ட் தனது சேவையை நிறுத்திவிட்டால் விண்டோஸ் பயன்படுத்தும் எல்லோருக்கும் பல்வேறு பாதுகாப்பு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இதனால் மக்கள் மட்டும் அல்ல பல லட்ச நிறுவனங்களும் தங்களது இயங்கு தளத்தைப் புதுப்பித்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.*
*⭐தற்போதைய நிலையில் விண்டோஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் உலகில் 39.22 சதவீதம் பேர் விண்டோஸ் 7, 4.41 சதவீதம் பேர் விண்டோஸ் 8.1, விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் இதர பழைய ஓஎஸ்களைப் பயன்படுத்துவோர் அளவு 4.45 சதவீதமாக உள்ளது.*
*⭐இதன் மூலம் விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பிற அனைத்து இயங்கு தளத்தைப் பயன்பாட்டாளர்களை விடவும் அதிகரித்துள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment