*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்.*
*⭐தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர்.எம்.ரவீந்திரராஜன் அவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளியான வேம்பார் புணித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தால் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் 03.01.2019 முதல் சட்டவிரோதமாகப் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்துசெய்யக்கோரி, தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு முடிவின்படி நாளை (26.01.2019 சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடியில் ரோமன் கத்தோலிக்க கூட்டாண்மைப் பள்ளிகளின் மேலாளர் மேதகு ஆயர் அவர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்யும் போராட்டம் நடைபெற உள்ளது.*
*⭐12.01.2019 மதுரை மாநிலச் செயற்குழு தீர்மானத்தின்படி மேற்படி பெருந்திரள் முறையீடு நிகழ்வில் அண்டை மாவட்டங்களிலிருந்து நம் இயக்கத்தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்துமாறு மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. போராட்ட நிகழ்வுக்கு குறுகிய கால அவகாசமே இருப்பதாலும், ஜாக்டோ ஜியோவின் போராட்ட நடவடிக்கை வெகு தீவிரமாக இருப்பதாலும், நம் சக தோழருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை மீட்கும் இப்போராட்டக்களத்தில் சிரமம் பாராது சிரமேற்கொண்டு பணியாற்றிட மாநில மையம் அன்புடன் வேண்டுகிறது.*
*⭐தூத்துக்குடி மாவட்டத் தோழர்கள் தங்களது சக்தி முழுவதையும் திரட்டி இப்போராட்டக்களத்தை வெற்றிகரமாக்கிட தோழமையுடன் மாநில மையம் கேட்டுக்கொள்கிறது.*
No comments:
Post a Comment