Friday, 25 January 2019

*26.01.2019 குடியரசு தினத்தில் நமது பள்ளியில் தேசியக் கொடியேற்றி நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய மரியாதையைச் செலுத்துவோம் - TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/01/26012019-tnptf.html


*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்.*



*⭐ஜாக்டோ ஜியோ காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட TNPTF இயக்க போராளிகளே...  நாளை (26.01.2019) சனிக்கிழமை 70 -வது குடியரசு தின விழாவிற்கு அனைவரும் பள்ளி சென்று தேசியக் கொடியேற்றி நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய மரியாதையைச் செலுத்தவேண்டுமாறும், பொதுமக்ளிடம் நமது கோரிக்கைகளின் நியாயம் குறித்து விளக்கி கூறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.*



*⭐ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 28.01.2019 அன்று நடைபெற உள்ள   மாவட்ட தலைநகர் மறியல் போரிலும் நமது இயக்கத் தோழர்கள் அனைவரும் நமது இயக்கத்திற்கே உரிய போர் குணத்தோடே கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.*



*_பொதுமக்களிடம் கீழ்க்கண்ட நமது நியாயமான போராட்டக் கோரிக்கைகளைப் பற்றி  கூறவும்_*.



*⚡2003 முதல் இனி வருங்காலங்களில் அரசுப்பணிகளில் சேர்பவர்களுக்கு பென்சன் இல்லை.*



*⚡அரசாணை 56 ன் படி பணியிடங்கள் குறைக்கப்பட்டு வருவதால் இனி 10 ஆண்டுகளுக்கு புதிய வேலை வாய்ப்புகள் யாருக்கும் கிடைக்காது.*



*⚡அரசாணை 100, 101 ன் படி ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்படுவதால் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காது.*



*⚡3500 ஆரம்பப்பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதால் அங்கு படிக்கும் மாணவர்கள் தினமும் பேருத்தில் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.*



*⚡இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்து அங்கன்வாடிகளுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். மாண்டிச்சோரி பயற்சி முடித்தவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.*



*⚡தொகுப்பூதியம் ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் காலமுறை ஊதியம்  வேண்டும்.*




*_கடமையை சொல்லாமல் செய்வோம்!_*



*_உரிமையை கேட்டுப் (போராடிப்) பெறுவோம்!!_*



*_நமது நியாயமான கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்!!!_*



*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: