*LKG-UKG ஆணை பெறுவதை ஜாக்டோஜியோ முடிவின்படி தவிர்க்கவும் - சன.18 ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச்செய்வோம் - சட்டரீதியான நடைமுறைகளும் எடுக்கப்படவுள்ளது : TNPTF பொதுச்செயலாளர்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/lkg-ukg-18-tnptf.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 5*
*நாள் : 17.01.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்.*
*⭐ _தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுடன் இணைந்த 2381அங்கன்வாடி மையங்களில் துவங்கப்படவுள்ள LKG, UKG வகுப்புகளில் கற்பித்தல் பணி செய்ய ஆரம்ப & நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் உபரி இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் முடிவு கல்வித்துறை விதிகளுக்குப் புறம்பானது என்பதால் அம்முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும்,_*
*⭐ _புதிதாகத் துவக்கவுள்ள LKG, UKG வகுப்புகளுக்கு முன்பருவக் கல்விக்கான ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பிற்காகக் காத்துக் கொண்டிருப்போரை நியமனம் செய்ய வேண்டும் எனவும்_*
*⭐12.01.2019 அன்று மதுரையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் தமிழக அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.*
*⭐மேலும், _ஜாக்டோ-ஜியோ முடிவின்படியும் பணிமாறுதல் ஆணைகள் பெற வேண்டாம்_ என்றும் மேற்படி ஆணையை பெறுவதைத் தவிர்ப்பதற்கு ஏதுவான சூழல்கள் குறித்துத் தொடர்புடைய ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்துமாறும் மாநிலச் செயற்குழுவிலேயே அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*⭐இந்நிலையில் 21.1.19-ல் அங்கன்வாடிகளில் LKG & UKG வகுப்புகளைத் தொடங்கிட தமிழக அரசும் கல்வித்துறையும் அவசர கோலத்தில் செயல்பட்டு கல்வித்துறை பணிநிலை விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுச் செயல்பட்டு வருகின்றன. இடைநிலை ஆசிரியர்களை முன்பருவக் கல்வி வகுப்புகளுக்கு நியமிப்பதே ஏற்புடையதல்ல என்றநிலையில் ஆசிரியர்களைத் தெரிவு செய்வதிலும் பல்வேறு குளறுபடிகளும்,முறைகேடுகளும் எழுந்துள்ளது.*
*⭐ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளபடி 18.01.2019-ற்கான களத்தைத் தீவிரப்படுத்துவதோடே இப்பிரச்சினையில் சட்டரீதியான தீர்விற்கும் நமது மாநில அமைப்பு தொடர்ந்து முழுவீச்சோடே செயல்பட்டு வருகிறது.*
*⭐இன்று வரை நீதிமன்றங்களுக்கு பொங்கல் விடுமுறை என்பதால் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர்களைச் சந்தித்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டு சட்டரீதியான தீர்வு குறித்து கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் நாள்களில் அரசின் முடிவிற்கு எதிராக வழக்கு பதியப்படும்.*
*⭐ஜாக்டோ-ஜியோவின் முடிவின்படி பணி மாறுதல் வாங்குவதில்லை என்னும் உறுதியான நிலைப்பாட்டோடே தொடர்புடைய இடைநிலை ஆசிரியர்கள் இருக்கக் கேட்டுக் கொள்வதோடு எந்நிலையிலும் நமது மாநில அமைப்பு உறுதுணையாக உடன் நிற்கும் என்ற உறுதியையும் மாநில அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.*
*⭐உரிமையைப் பறிக்க நினைக்கும் அதிகார வர்க்கம் தன்னாலான அனைத்துவித அதிகாரங்களையும், மிரட்டல்களையும்,அச்சத்தைத் தோற்றுவிக்கும் அறிவிப்புகளையும் செய்யத் துணிந்து கொண்டேதான் இருக்கும். இது எதற்கும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ் சிடக்கூடாது*
*⭐ஜாக்டோ-ஜியோ அறிவிப்பின்படி நாளை (18.01.2019) மாலை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் நமது இயக்கத் தோழர்கள் அனைவரும் பங்கேடுத்து ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்வோம்.*
*🤝தோழமையுடன்,*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment