Friday, 18 January 2019

*ஜாக்டோ ஜியோ சார்பாக இன்று (18.01.2019) நடைபெற்ற மாவட்ட தலைநகர் ஆர்பாட்ட புகைப்படத் தொகுப்பு மற்றும் 22.01.2019 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நமது இயக்க உறுப்பினர்கள் எழுச்சியோடு பங்குகொள்ள வேண்டி TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/18012019-22012019-tnptf.html


*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்.*



*⚡அங்கன்வாடி மையங்களில் துவக்கப்பட்டுள்ள LKG, UKG வகுப்புகளில் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதை உடனடியாக கைவிட வேண்டும்,*


*⚡LKG, UKG வகுப்புகளுக்கு மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்,*


*⚡தொடக்கக்கல்வியை சீரழிக்கும் பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.*


*⭐உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஜேக்டோ-ஜியோ சார்பில் இன்று (18.01.2019) மாபெரும் ஆர்ப்பாட்டம்*


*⭐இன்றைய ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் ஜாக்டோ ஜியோ வின் போராட்டங்களில் விண்ணைப்பிளந்த கோஷம் _போராடுவோம் வெற்றி பெறுவோம் செவ்வாய் கிழமையில் இருந்து அனைத்து பள்ளிகளையும் மூடி வேலைநிறுத்தத்தை வெற்றியாக்குவோம்_*


*⭐ஜாக்டோ ஜியோ சார்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உணர்வுபூர்வமாக பங்குபெற்ற நமது இயக்க தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் மாநில மையத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.*


*⭐தொடர்ந்து வரக்கூடிய (22.1.19) செவ்வாய் கிழமை முதல் ஜாக்டோ ஜியோ சார்பாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறக்கூடிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் நமது இயக்க தோழர்கள் நமது இயக்கத்திற்கே உரிய போராட்ட குணத்தோடு அனைத்து ஆசிரியர்களும் பங்குபெற்று அரசுக்கு நமது கோரிக்கைகளை உணர்த்த வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*


*⭐தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று (18.01.2019) மாலை நேர ஆர்பாட்டத்திற்கு அலைகடலென திரண்ட ஆசிரியர் கூட்டம் - புகைப்படத் தொகுப்பினைக் காண கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே!*

👇👇👇👇👇👇👇👇

https://tnptfayan.blogspot.com/2019/01/18012019-22012019-tnptf.html



*🤝தோழமையுடன்,*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






























































No comments: