*அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - _இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்_ வலியுறுத்தல்.**
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_19.html
*⭐தமிழகத்தில் ஜனவரி 22 இல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.*
*⭐எனவே, அவர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என _இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்_ வலியுறுத்தியுள்ளார்.*
*_விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:_*
*⭐மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றம் சென்றனர்.*
*⭐நீதிமன்றம் உத்தரவிட்டும், கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு வாய்தா வாங்கி வருகிறது.*
*⭐இதனால், வேறு வழியின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஜன., 22 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு அவர்களை அழைத்துப் பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என்றார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment