Saturday, 5 January 2019

*தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகள் துவங்க பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் அவ்வகுப்புகளில் பணிபுரிய பெண் ஆசிரியர்கள் விவரம் கோருவது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/01/lkg-ukg.html


*🌟அரசாணை (நிலை) எண்.89, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் (SW-7(1) துறை, நாள் - 11.12.2018 ன் படி தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை 2381 என கண்டறியப்பட்டு, அம்மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகள் ஆரம்பிப்பதற்காக, அரசாணையில் குறிப்பிட்டுள்ள மையங்களின் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் 17.12.2018 அன்று கோரப்பட்டது.*  


*🌟ஒவ்வொரு மையத்திலும் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு பாடம் போதிப்பதற்காக ஒரு பெண் ஆசிரியை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை படிஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியர்களின் உபரி பணியிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பணியிடத்துடன் உபரியாக உள்ள ஆசிரியர்களில் பெண் ஆசிரியர்களை ஒவ்வொரு மையத்திற்கும் ஒருவர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு அந்த ஒன்றியத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும்போது அருகிலுள்ள ஒன்றியத்திலிருந்து அவருடைய முதுநிலை (Seniority) மாறாதவாறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.*  


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: