*தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு MRB செவிலியர் சங்கம் கடும் கண்டனம். JACTTO-GEO போராட்டத்திற்கும் ஆதரவு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/mrb-jactto-geo.html
*⭐தமிழ்நாடு MRB செவிலியர் மேம்பாட்டு சங்கம் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர்.க.கோபிநாதன் மற்றும் பொதுச் செயலாளர் தோழர்.நே.சுபின் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை :*
*⭐பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியருக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ 22.1.2019 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.*
*⭐ஜாக்டோ-ஜியோவின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி*
*⭐அரசு ஆசிரியர்களுக்கு மாற்றாக, ரூ.7500/-ற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களின் நலனில் அக்கரையில்லாமல் செயல்படும் அரசின் போக்கினை தமிழ்நாடு MRB செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.*
*⭐மேலும் காலம் தாழ்த்தாமல் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழ்நாடு MRB செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.*
*⭐மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துகளையும், மேலான ஆதரவையும் தமிழ்நாடு MRB செவிலியர் மேம்பாட்டு சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment