*_“கூட்டுப்போராட்டம் தோற்றதாக வரலாறு இல்லை”_ - TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/tnptf_25.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 2/2019*
*நாள் : 25.01.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! அனைவருக்கும் புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்கள்!_*
*⭐ஜாக்டோ ஜியோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டக்களம் தமிழகம் முழுவதும் கனன்று கொண்டிருக்கிறது. ஜாக்டோ ஜியோ என்ற அக்கினிக்குஞ்சு பற்றவைத்த போராட்ட நெருப்பு பெருநெருப்பாய் தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.*
*⭐தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோபக்கனலை, தன்னெழுச்சியைஇ கோரிக்கைகளின் நியாயத்தைத் தமிழக அரசு இன்னும் புரிந்து கொள்வதாய் இல்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாகவும், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலமாகவும் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக அரசு பகற்கனவு கண்டுகொண்டிருக்கிறது.*
*⭐நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் போர்க்குணமிக்க ராணுவக் கட்டுப்பாட்டுடன் கூடிய களநிகழ்வுகளைக் கண்டு தமிழக அரசுக்கு மிகப்பெரிய எரிச்சல். அதன் விளைவுதான் தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பதும், 17(பி) நடவடிக்கை என்பதும்.*
*⭐இதுபோன்ற பல நடவடிக்கைகளை தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பலமுறை சந்தித்தவர்கள்.*
*⭐1985 போராட்டத்தில் 65ஆயிரம் ஆசிரியர்கள் சிறைச்சாலையிலே ஒரு மாதத்திற்கும் மேல் அடைக்கப்பட்டிருந்த நிகழ்வும், பல்லாயிரக்கணக்கானோருக்கு 17(பி) வழங்கப்பட்ட நிகழ்வையும் சந்தித்தவர்கள். அப்போதைய தமிழக அரசும் வேலைநிறுத்தகாலத்தில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்ததும் கடந்த கால வரலாறு.*
*⭐1988 போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறை சென்ற நிகழ்வும் பல்லாயிரக்கணக்கானோர் 17(பி) பெற்ற நிகழ்வும் நடந்தது. இவ்வாறெல்லாம் நடந்த பின்புதான் மத்திய அரசுக்கு இணையான ஊதியமும் கிடைத்தது என்பதை தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினம் புரிந்து கொள்ளவேண்டும்.*
*⭐2003 ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒருதுளி மையில் ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் பேரை டிஸ்மிஸ் செய்த நிகழ்வையும், எஸ்மா, டெஸ்மா சட்டங்களைச் சந்தித்து சிறையேகிய நிகழ்வுகளும் நடந்தபின்புதான் பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டது. எஸ்மா, டெஸ்மா உடைத்தெறியப்பட்டது.*
*⭐ஆகவே, இதுபோன்ற போராட்டக்காலங்களில், போராட்டக்களங்களில் அரசின் அச்சுறுத்தல்கள் என்பது வாடிக்கை என்பதை தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினம் புரிந்து கொள்ள வேண்டும். 8 லட்சம் பேருக்கு 17(பி) வழங்கப்பட்டால்இ அதற்குப் பெயர் 17(பி) அல்ல என்பதையும், அரசின் அச்சுறுத்தல் என்பது இருட்டில் நடந்து செல்பவன் அச்சத்தைப் போக்க பாடிக்கொண்டே நடப்பதைப் போன்றது என்பதையும், 17(பி) கொடுப்பதற்கே பல அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லை என்பதையும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.*
*⭐இதுபோன்ற அடக்குமுறைகளை ஏவிவிட்டவர்கள் அதற்குரிய பலனை அனுபவித்த வரலாறுகள் பல உண்டு _“எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு”_ என்ற விஞ்ஞானத்தை ஆட்சியாளர்களுக்கு புகட்டும் காலமும் வெகு தொலைவில் இல்லை.*
*⭐வரலாற்றில் இடம்பிடித்த நேற்றைய (24.01.2019) மறியல் போரை தோற்கடிக்கும் மறியல் போரை இன்று (25.01.2019) நடத்துவோம்.*
*_அச்சத்தைத் துச்சமெனத் தூக்கி யெறிவோம்!_*
*_உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்போம்!_*
*_“கூட்டுப்போராட்டம் தோற்றதாக வரலாறு இல்லை”_ அந்த வரலாற்றை மீண்டும் படைப்போம்!*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment