Tuesday, 1 January 2019

*NHIS - மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முழு பணப் பலன்களை பெற்றுத்தந்து சாதனை படைத்து வரும் "தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி"*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/nhis.html


*NHIS- திட்டத்தில் நடக்கும் மோசடிகளில் இருந்து ஆசிரியர்கள்& அரசு ஊழியர்களை காக்கும் கேடையம் TNPTF*


💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

*TNPTF - வெற்றி தொடர்கையில் அடுத்த அதிரடி  வெற்றி*



*⭐ஈரோடு கலைமகள் தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை திருமதி. தீபப்பிரியா அவர்களின் கணவர் வயிற்றில் ஏற்பட்ட கட்டி காரணமாக சென்னையில் உள்ள குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..*


*⭐அவரது மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் NHIS திட்டத்தின் கீழ் 23,000/- மட்டுமே தகுதியுடைய தொகை என்று தெரிவித்துள்ளது..*


*⭐ஆனால், மருத்துவச் செலவாக ரூ.1,33,000/- ஐ கட்டுமாறு கூறியுள்ளது..*


*⭐இந்நிகழ்வு ஈரோடு TNPTF நகரப் பொருளாளர் தோழர்.மணிவேல் மூலமாக, மாநில பொதுக்குழு உறுப்பினர் தோழர்.இரா.மணி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது..*


*⭐இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக பணத்தைக் கட்டுமாறு கூறியதால், ரூ.1,00,000/- ஐ மருத்துவமனையில் கட்டி விட்டார்..*


*⭐இருப்பினும் தோழர்.மணி TNPTF ன் NHIS மாநில ஒருங்கிணைப்பாளர் _தோழர்.செல்வகணேஷ்_ அவர்களைத் தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறவே,*


*⭐உடனடியாக விரைந்து செயல்பட்ட தோழர்.செல்வகணேஷ் சென்னை குமரன் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு NHIS திட்டத்தின் கீழ் ரூ.23,000/-ஒதுக்கியது போதாது, முழுத்தொகையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மருத்துவச் செலவாகக் கூறப்பட்ட ரூ.1,33,000/- ல் மருத்துவர் கட்டணம் அதிகமாக உள்ளதாகக் கூறி அதில் 10,000/- ஐ குறைக்கச் செய்தார்..*


*⭐இதை ஏற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் மருத்துவச் செலவை 1,23,000/- ஆகக் குறைத்தது..*


*⭐இந்நிலையில் NHIS இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமும் மருத்துவச் செலவாக ஏற்கனவே கூறிய 23,000/- க்கு பதிலாக 1,10,000/- தர ஒப்புக் கொண்டது..*


*⭐இதன் காரணமாக ஆசிரியை ரூ.13,000/- ஐ மட்டுமே கட்டினால் போதுமானது..*


*⭐ஏற்கனவே கட்டியிருந்த 1,00,000/- ஐ காசோலையாக மருத்துவமனை நிர்வாகம் இரண்டு நாட்களில் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளது.. இத்தகவலை ஆசிரியை நம்மிடம் தெரிவித்தார்..*


*⭐உரிய நேரத்தில் உரிய வகையில் விரைந்து செயல்பட்ட _தோழர்.செல்வகணேஷ்_ அவர்களுக்கு ஈரோடு வட்டாரக்கிளை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*⚡ஆசிரியர் நலன்!*

*⚡மாணவர் நலன்!!*

*⚡கல்வி நலன்!!!*


*_இவை மூன்றும் TNPTF ன் தாரகமந்திரம்._*

*ஜிந்தாபாத்*  

*ஜிந்தாபாத்*

*TNPTF ஜிந்தாபாத்*



*📧தகவல் பகிர்வு;*

*_கொளத்தூர் TNPTF_*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: