*தமிழக அரசு சர்வாதிகார ஆணவப் போக்கில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) வன்மையாகக் கண்டிக்கிறது - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/tnptf_26.html
*மாநிலஅமைப்பின் செய்தி அறிக்கை எண் : 2/2019*
*நாள் : 26.01.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்*
*⭐நேற்று (25.01.2019) நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது _தமிழக அரசின் காவல்துறை தமிழகம் முழுவதும் மேற்கொண்ட சட்டவிரோத, மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளைதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது._*
*⭐மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு _சிலரை மட்டும் குறிவைத்து கைது_ செய்து காவல்துறை சிறையிலடைத்துள்ளது.*
*⭐கைது செய்யப்பட்டவர்கள் மீது _பொருத்தமற்ற, மோசமான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு_ செய்யப்பட்டுள்ளது என்பதும், சில மாவட்டங்களில் _கொலை முயற்சி உள்ளிட்ட ஏழெட்டுப் பிரிவுகளில் வழக்குப்பதிவு_ செய்யப்பட்டுள்ளது என்பதும் _காவல்துறையின் அத்துமீறிய அராஜக நடவடிக்கைக்கு_ எடுத்துக்காட்டு ஆகும்.*
*⭐மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட _பெண்களை கைது செய்து 6 மணிக்கு மேல் எவ்வித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல்_ பாதுகாப்பற்ற முறையிலும், எவ்வித அடிப்படை வசதிகளுமின்றியும் _இரவு முழுவதும் மண்டபங்களில் உணவு, தண்ணீர் கூட கொடுக்காமலும், அவற்றை வாங்குவதற்குக் கூட அனுமதிக்காமலும்_ வைத்திருந்தது என்பது _தமிழக அரசின் பழிவாங்கும் மனோபாவத்தையும், ஆணவப்போக்கையும்_ வெளிப்படுத்துகிறது.*
*⭐தூத்துக்குடி மாவட்டம் _கோவில்பட்டியில்_ கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த _பெண் ஆசிரியர்களை நள்ளிரவு 12 மணிக்கு மேல் காவல்துறையினர் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துச்சென்ற நிகழ்வும், ஆண்களை முரட்டுத்தனமாக வெறித்தனத்தோடு கைது செய்த நிகழ்ச்சியும்_ வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.*
*⭐பல மாவட்டங்களில் கடும் _குற்றவாளிகளைக்_ கைது செய்வதைப்போல, _தேச விரோதிகளைக் கைது செய்வதைப்போல_ தெருவில் நடந்து சென்றவர்களையும், ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களையும், டீ குடித்துக் கொண்டிருந்தவர்களையும் _கைது செய்த நிகழ்வு_ என்பது _என்றென்றும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த அரசுக்கு அழியா அவப்பெயரை_ ஏற்படுத்திவிட்டது.*
*⭐மறியலில் பங்கேற்று _கைதானவர்களை விடுவித்துவிட்டு நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளைப்போல கைது செய்தது_ என்பது இந்த அரசின் சர்வாதிகாரப்போக்கின் வெளிப்பாடாகும்.*
*⭐இதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*⭐தமிழக அரசு _காவல்துறை_ மூலம் நேற்று மேற்கொண்ட _அத்துமீறிய சர்வாதிகார நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மாநில ஜாக்டோ ஜியோ_ மேற்கொண்டுள்ளது.*
*⭐தமிழக அரசு உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் விடுவித்திட வேண்டும். இல்லையேல் தமிழக அரசு அதற்குரிய பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.*
*சென்னை*
*26.01.2019*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment