*அரசு ஜாக்டோ ஜியோவின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_26.html
*⭐3500 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி அவதிப்படும் நிலையில், வேலை வாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை எண். 56, 100, 101 -ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.*
*⭐தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த டிசம்பர் 4-ம் தேதியிலிருந்து நடைபெறும் என ஏற்கெனவே ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமென்றும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில், வேலைநிறுத்தம் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.*
*⭐உயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கு மூன்று முறை விசாரணைக்கு வந்த போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை சம்பந்தமாக மாநில அரசு எந்த ஆலோசனையையும் முன்வைக்கவில்லை. இதனால் ஜாக்டோ ஜியோ ஜன.22 முதல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*
*⭐ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாநில அரசு முன்வராததே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு காரணமாக உள்ளது. உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணாத மாநில அரசின் ஜனநாயக விரோத போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது.*
*⭐உடனடியாக ஜாக்டோ ஜியோ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராடும் ஆசிரியர், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் நலன்களை பாதுகாக்க முன்வருமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.*
*⭐போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும், தமிழக அரசின் ஊழியர் விரோத போக்கை கைவிடவும் இப்போராட்டத்திற்கு துணை நிற்குமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.”*
*இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment