*“நெஞ்சில் மூண்ட நெருப்புக்குச் சமரசம் ஏதும் கிடையாது”_ எனவே நாளைய மறியல் போர்க்களத்தை மகத்தானதாக்குவோம் - TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/tnptf_27.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 12/2019* *நாள் : 27.01.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்கள்.*
*⭐நாளைய (28.01.2019) ஜாக்டோ ஜியோவின் மறியல் போராட்டக்களம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாளைய மறியல் போராட்டத்தை எவ்வளவு வலிமையுடன் நடத்த முடியுமோ அவ்வளவு வலிமையுடன் நடத்திட வேண்டும். இதற்கு முன்பு நடைபெற்ற மூன்று நாட்கள் மறியல் போராட்டத்தைக் காட்டிலும் எழுச்சியும், எண்ணிக்கையும் கொண்டதாக களம் அமையவேண்டும். இந்நிகழ்வில் நம் இயக்கத் தோழர்களின் பங்கேற்பு மகத்தானதாக இருக்கவேண்டும்.*
*⭐நாளைய மாவட்டத்தலைநகர் மறியல் போரில் நம் இயக்க உறுப்பினர்களுடன் மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். அதுவே இயக்க உறுப்பினர்களுக்கு உற்சாகத்தை தருவதாக அமைந்திடும். நாளைய மறியலில் மாநிலத்தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள் திருநெல்வேலியிலும், _மாநிலப்பொதுச்செயலாளராகிய நான் தூத்துக்குடியிலும்._ மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ திருவண்ணாமலையிலும் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரும் அவர்களது சொந்த மாவட்டங்களிலும் பங்கேற்கிறார்கள்.*
*⭐அடுத்து வரும் போராட்ட நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக வட்டார, மாவட்ட, மாநில அளவில் ஒரு சில பொருத்தமான தோழர்களை மட்டும் வெளியில் இருக்கச் செய்திட வேண்டும். போராட்டக்களம் இப்போதுதான் 1985, 1988 மற்றும் 2003 களச்சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே, மீண்டும் ஒரு வெற்றி வரலாறு படைக்கப்படுவது உறுதியாகிவிட்டது. நம் இயக்கப் பொறுப்பாளர்கள் காவல்துறையின் முன்னெச்சரிக்கைக் கைது நடவடிக்கைக்கு உட்படாமல் இருக்க வேண்டும். நாளைய மறியல் போர் களத்தில்தான் கைதாகிட வேண்டும் என்பதில் தோழர்கள் உறுதியுடன் இருக்கவேண்டும்.*
*⭐ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற மறியல் போரில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் காவல்துறை நடந்து கொண்ட அராஜக நடவடிக்கைகளும், பெண்களிடம் நடந்து கொண்ட விதமும், நள்ளிரவு கைது நடவடிக்கைகளும், தமிழக அரசின் மிரட்டல் நடவடிக்கைகளான 17(பி), தற்காலிகப் பணிநீக்க நடவடிக்கைகளும் மாண்புமிகு.நீதியரசர்களின் கவனத்திற்குச் செல்லும். நீதிமன்றம் நியாயம் வழங்கும். நாளைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.*
*⭐தற்போது தமிழக அரசு அச்சத்தின் உச்சத்தில் நின்றுகொண்டு நம்மீது எச்சத்தை பொழிந்து கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க தவறான தகவல்களை ஊடகங்கள் வழியே பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவும் செய்யும் தமிழக அரசு ஜாக்டோ ஜியோவுடன் பேசுவதற்குக் கூட தயாரில்லை. இதிலிருந்தே இப்போராட்டத்திற்குக் காரணம் தமிழக அரசு மட்டுமே என்பது புரியும்.*
*⭐25.01.2019 க்குள் பணிக்குத் திரும்பினால் நடவடிக்கை ஏதும் இருக்காது என்று கூறிய தமிழக அரசு தற்போது 28.01.2019க்குள் திரும்பினால் நடவடிக்கை இருக்காது என்று கூறுகிறது. இந்தத்தேதி எத்தனை முறை நீட்டிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் சிறிதும் சலனப்பட மாட்டார்கள்.*
*⭐பல மாவட்டங்களில் 17(பி), தற்காலிகப் பணிநீக்க ஆணைகளை வழங்குவதில் சில வட்டாரக்கல்வி அலுவலர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள். பள்ளிகள் இணைப்பு அரங்கேறும் போது இவர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களாகவே இருக்க மாட்டார்கள் என்பதைக்கூட உணராத அதிகார போதையில் இவர்கள் இருப்பதை உணர முடிகிறது. தமிழ்நாட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைப் பாதுகாக்கும் வலிமை ஜாக்டோ ஜியோவிற்கு உண்டு.*
*⭐நிறைவாக ........... தோழர்களே! _“நெஞ்சில் மூண்ட நெருப்புக்குச் சமரசம் ஏதும் கிடையாது”_ எனவே நாளைய மறியல்போர்க்களத்தை மகத்தானதாக்குவோம். _“பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா”_ என்று குழந்தைகளுக்குப் போதிக்கும் நாம் துணிச்சலுடன் களத்தை எதிர்கொள்வோம்.*
*_நாளைய வெற்றி நமதே!_*
*_“இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது!_*
*_போராட்டம் இல்லாமல் எதுவும் கிடைக்காது!”_*
*🤝போராட்ட வாழ்த்துக்களுடன்*
*_ச.மயில்_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment