*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவசர மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் (03.02.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு, மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*
*_கூட்டப்பொருள்:_*
*⚡வேலை அறிக்கை,*
*⚡ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் - ஆய்வு - அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள்,*
*⚡26.11.2018 அரசாணை எரிப்புப் போராட்டம் - தொடர் நடவடிக்கைகள்,*
*⚡19.02.2019 - டெல்லி பேரணி,*
*⚡ஆசிரியர் பிரச்சினைகள் (எழுத்து பூர்வமாக),*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன,*
*🌟மாநில செயற்குழுவில் உள்ள தோழர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.*
*_மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்:_*
*🌟03.02.2019 ஞாயிறு காலை 9.00 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும்.*
*_நாளை(03.02.2019)மாநில செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தரும் மாவட்டச்செயலாளர்கள் கீழ்க்கண்ட புள்ளி விவரங்களைத் தவறாது கொண்டுவரவும்_*
*⚡தங்கள் மாவட்டத்தில் ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர்கள் மற்றும் பிணையில் வெளிவந்தவர்களின் மொத்த எண்ணிக்கை*
*⚡மேற்கண்ட எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை.*
*⚡ஆசிரியர் எண்ணிக்கையில் சங்கவாரியாக எண்ணிக்கை*
*⚡வேலைநிறுத்தப் போராட்டத்தின் இறுதிநாளில் (30.01.2019) வேலை நிறுத்தத்தில் இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை*
No comments:
Post a Comment