Saturday, 2 February 2019

*ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீதான பணியிட மாறுதல் உத்தரவு நிறுத்தம்! : TNPTF பொதுச்செயலாளர்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/02/tnptf.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 14*

*நாள் : 02.02.2019*



*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்!*


*🌟ஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 30.1.2019 வரை களத்தில் இருந்த தோழர்கள் மீது மதிப்புமிகு தொடக்கக்கல்வித் துறை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி பணியிட மாறுதல் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.*


*🌟இதுதொடர்பாக 31.1.2019 முதல் இன்று வரை தொடர்ச்சியாக தொடர்ந்து மூன்று தினங்களாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையமானது மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் பேசி வந்தது.*


*🌟இதனைத் தொடர்ந்து மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களிடம் தொடர்ந்து இதுகுறித்து பேசிவந்தார்.*


*🌟ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்துப் பேச நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.*



*🌟இந்நிலையில் தற்போது மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் படி தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுவரும் பணியிட மாறுதல் உத்தரவுகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக மாண்புமிகு தொடக்கக் கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ளார்.*


*🌟மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களுக்குக் குறிப்பாணைகள் மட்டும் வழங்குவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.*


*🌟எனவே தோழர்கள் யாரும் பணியிட மாறுதல் குறித்த அச்சம் இன்றி தொடர்ந்து தங்களது பணியிடத்தில் பணி செய்ய மாநில மையம் கேட்டுக் கொள்கிறது.*



*🌟மேலும் தற்போது தான் இந்த உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதால் ஒரு சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் தொடர்ச்சியாகப் பணியிட மாறுதல் ஆணை வழங்கி வருகின்றனர். இது குறித்த எவ்வித அச்சமும் கொள்ளவேண்டாம். தொடக்கக் கல்வி இயக்குனரகம் தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் தொடர்ச்சியாகத் தகவலைத் தெரிவித்து வருகிறது.*



*🌟எனவே, தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிட மாறுதல் ஆணைகளை எவரும் பெறத் தேவையில்லை.*


*🌟மேலும், குறிப்பாணையை எதிர் கொள்வதற்குத் தேவையான உரிய வழிமுறைகளை நமது மாநில அமைப்பும் ஜாக்டோ-ஜியோவும் வழங்கும். இதனையும் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளில் தொடர்ந்து ஈடுபடும்.*


*🌟தோழர்கள் சமூக வலைதளங்களில் வலம்வரும் தேவையற்ற வீணான வதந்திகளை நம்பி தங்களைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நாளது தேதிவரை எடுக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் குறித்து நாளைய தினம் நடைபெறும் மாநிலச் செயற்குழுவில் பொறுப்பாளர்கள் வழியே தங்களுக்குத் தெரிவிக்கப்படும்.*


*🌟களத்தில் உறுதியாக நின்ற தோழர்களைக் காக்கும் பொறுப்பும் கடமையும் நமது மாநில மையத்திற்கு உண்டு. எனவே, மன உளைச்சல் ஏதுமின்றி தங்களின் கல்விப் பணியைத் திறம்பட மேற்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.*


*சென்னை,*

*02.02.2019*




*🤝தோழமையுடன்,*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: