*அமைச்சர்கள் மற்றும் செயலாளர் உடனான ஜாக்டோ-ஜியோவின் சந்திப்பு சுமூகச் சூழலை ஏற்படுத்தியுள்ளது : TNPTF பொதுச்செயலாளர்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/02/tnptf_4.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 15*
*நாள் : 04.02.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்!*
*🌟 _ஜாக்டோ ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்_ இன்று (04.02.19) சென்னையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்திற்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பி அகில இந்திய செயற்குழு உறுப்பினரும், _ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளருமான திரு.மோசஸ், திரு.வெங்கடேசன் மற்றும் திரு.சங்கர பெருமாள்_ உள்ளிட்டோர் கூட்டுத் தலைமை ஏற்றனர்.*
*🌟இக்கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்து _சிறைப்படுத்தப்பட்ட தோழர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளையும் மற்றும் பணியிட மாறுதல் குறித்த நடவடிக்கைகளையும் கைவிட வலியுறுத்தி_ மாண்புமிகு தமிழக முதலமைச்சர், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாண்புமிகு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.*
*🌟அதன்படி இன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் _மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன்_ அவர்களையும் _மாண்புமிகு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார்_ அவர்களையும் ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்தனர்.*
*🌟ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை இன்றைய கூட்டத் தலைவர் தோழர்.மோசஸ் அவர்கள் அமைச்சர்களிடம் வழங்கினார்.*
*🌟அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் எப்பொழுதும் தாங்கள் ஆசிரியர்களுக்கு உற்ற துணையாக இருப்போம் என்றும் தமது கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும் இதுகுறித்த தகவல்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும் உறுதி அளித்தனர்.*
*🌟இதனை தொடர்ந்து _மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ்_ அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் பிரச்சினைகள் களைந்து நாம் இணைந்து செயலாற்றுவோம் என்று உறுதியளித்தார்.*
*🌟அமைச்சர் பெருமக்கள் மற்றும் முதன்மைச் செயலாளர் உடனான இன்றைய சந்திப்பு நேர்மறையான முறையில் அமைந்தது.*
*🌟இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களையும் நேரில் சந்தித்து நமது கோரிக்கைகள் குறித்து பேச நேரம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.*
*🌟ஜாக்டோ-ஜியோவின் இன்றைய நடவடிக்கைகள் சுமுகமான களச்சூழலுக்குள்ளாக நம்மை இட்டுச் சென்றுள்ளது.*
*🤝தோழமையுடன்,*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment