*ஜாக்டோ-ஜியோ அமைச்சரக சந்திப்பு விபரம் : TNPTF பொதுச்செயலாளர்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/02/tnptf_6.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 17*
*நாள் : 06.02.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்!*
*🌟இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினரும், _ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளருமான திரு.மோசஸ், திரு.வெங்கடேசன் மற்றும் திரு.சங்கர பெருமாள்_ உள்ளிட்டோரின் கூட்டுத் தலைமையில் (04.02.19) திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவின்படி,*
*🌟 _ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேற்றைய (05.02.2019) தினம் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களையும், மதிப்புமிகு இயக்குநர்களையும்_ நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.*
*🌟இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான _இன்று (06.02.2019) முற்பகல் 11.00 மணிக்கு மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம்_ அவர்களை ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திக்க துணை முதல்வர் அவர்களே நேரம் ஒதுக்கியிருந்தார்.*
*🌟இன்று 06.02.19 புதன்கிழமை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் துணைமுதல்வர் அவர்களை சந்திப்பதற்காக தலைமைச்செயலகம் வந்தனர், ஆனால் துணை முதல்வர் அவர்கள் இன்று காலை அவசர வேலை காரணமாக மதுரை சென்று விட்டபடியால் _கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன்_ உடனான சந்திப்பு நடந்தது.*
*🌟சந்திப்பில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து _முதலமைச்சர், துணை முதலமைச்சர்_ இருவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இருவரும் சென்னை திரும்பியதும் விவாதித்து விட்டு அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற உத்தரவு அறிவிக்கப்படும் என _கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன்_ அவர்கள் உறுதியளித்துள்ளார்.*
*🌟மேலும் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் கல்வித் துறை அமைச்சர் சந்தித்திப்பில், ஆசிரியர்கள் மாறுதல் உத்தரவுகளை உடனடியாக நிறுத்தச் சொல்லி கல்வித் துறை செயலாளரிடம் கூறுவதாகவும் கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.*
*🌟எனவே மாறுதல் உத்தரவை அஞ்சல் வழியில் பெற்றாலும் அவர்கள் முன்பு பணிபுரியும் பள்ளியிலிருந்து விடுவிக்க தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.*
*🤝தோழமையுடன்,*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment