*துணை முதல்வருடனான ஜாக்டோ-ஜியோவின் சந்திப்பு விபரம் : TNPTF பொதுச்செயலாளர்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/02/tnptf_5.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 16*
*நாள் : 05.02.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்!*
*🌟இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினரும், _ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளருமான திரு.மோசஸ், திரு.வெங்கடேசன் மற்றும் திரு.சங்கர பெருமாள்_ உள்ளிட்டோரின் கூட்டுத் தலைமையில் நேற்று (04.02.19) சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவின்படி,*
*🌟 _ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேற்றைய தினம் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாண்புமிகு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர்_ உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.*
*🌟இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக _இன்று (05.02.2019) பிற்பகலில் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம்_ அவர்களை ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்தனர்.*
*🌟சிறைப்படுத்தப்பட்ட தோழர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளையும் மற்றும் பணியிட மாறுதல் குறித்த நடவடிக்கைகளையும் கைவிட வலியுறுத்தும் கோரிக்கை மனுவினை ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளர் _திரு.மோசஸ் அவர்கள் வழங்கி கோரிக்கைகள் குறித்தும் பேசினார்._*
*🌟நிதிநிலை அறிக்கை வரும் 8-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பணிச் சூழல் மத்தியில், நிதித்துறையையும் கவனித்து வரும் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்கள் நமது கோரிக்கைகள் குறித்து கேட்டுக் கொண்டதோடு மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார்.*
*🌟மேலும், நாளை (06.02.2019) முற்பகல் 11:00 மணியளவில் மீண்டும் சந்திக்க வருமாறு ஜாக்டோ-ஜியோவிற்கு நேரம் ஒதுக்கித் தந்துள்ளார்.*
*🌟இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.00 மணிக்கு DPI சென்று இயக்குநர்களை சந்திக்க உள்ளார்கள்*
*🌟மூன்றாம் நாள் அமைச்சரகச் சந்திப்புகளுக்காக ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர்.*
*🤝தோழமையுடன்,*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment