*பொள்ளாச்சி வன்கொடுமைச் சம்பவம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_14.html
*_பொதுச்செயலாளரின் செய்தி அறிக்கை எண்: 6/2019 நாள் : 14.03.2019_*
*🌟பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழகம் முழுவதும் மக்களிடையே பேரதிர்ச்சியையும், பெருங்கோபத்தையும், பெருங்கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வந்து கொண்டிருக்கும் பல்வேறு செய்திகள் மற்றும் வீடியோ பதிவுகள் மனிதாபிமானமுள்ள எவரையும் பதைபதைப்புக்கு உள்ளாக்குகிறது.*
*🌟தங்களின் குற்றச்செயல்கள் மூலம் சமூகப் பதட்டத்தையும், கலாச்சாரச் சீரழிவையும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைமையும், தமிழகம் முழுவதும் அசாதாரணச் சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ள கொடுங்குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.*
*🌟கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளோடு தொடர்புடையவர்கள் முறையான விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டு அனைத்துக் குற்றவாளிகளூம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.*
*🌟குற்றவாளிகளுக்கு சட்டப்படி உச்சபட்சத் தண்டனை வழங்கப்படவேண்டும். நடந்து விட்ட இக்கொடுமையை சமூக அக்கறையுள்ள, மனிதாபிமானமுள்ள எவராலும் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.*
*🌟தொழில்நுட்ப வளர்ச்சியைத் தவறாகக் கையாளுவதால் நடைபெறும் இதுபோன்ற கொடுங்குற்றங்ககளை இளம்பெண்கள், மாணவிகள் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.*
*_“மாதர் தம்மை இழிவுசெய்யும்_*
*_மடமையைக் கொளுத்துவாம்”_*
என்றான் *_மகாகவி._*
*🌟காலங்காலமாகப் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இதுபோன்ற ஈவு இரக்கமற்ற இழிசெயல்கள் நாம் நாகரீக சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்திற்கே மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.*
🌟மேலும், *சமூகத்தில் இதுபோன்ற இழிச்செயல்கள் இனிமேலும் நடைபெறாவண்ணம் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் உச்சபட்ச சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment