*இ.நி.ஆ ஊதியமீட்பு அரசாணை எரிப்புப் போராட்டம் : திருச்சி & புதுக்கோட்டை TNPTF தோழர்கள் மீதான FIR இரத்து*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/03/tnptf-fir.html
*🌟இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்பு நடவடிக்கையாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் இணைந்து திருச்சியில் நடத்தப்பட்ட அரசாணை எரிப்புப் போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை(FIR) பதியப்பட்டது.*
*🌟இதனை எதிர்த்து TNPTF சார்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று (14.03.19) _சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்_ விசாரணைக்கு வந்தது.*
*🌟வழக்கை விசாரித்த மதிப்புமிகு நீதிபதி அவர்கள் _காவல் துறையால் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிகக்கையை ரத்து செய்து உத்தரவு_ பிறப்பித்தார்.*
*🌟இந்நிகழ்வுக்கு பெரிதும் முயற்சி எடுத்த நமது பேரியக்கத்தின் _மாநில மையத்திற்கும்,_ நமது _வழக்கறிஞர்_ மரியாதைக்குரிய _திரு.லஜபதிராய்_ அவர்களுக்கும், உறுதுணையாகச் செயல்பட்ட _மதுரை மாவட்டச் செயலாளர் தோழர்.ஒச்சுக்காளை_ அவர்களுக்கும்,மதுரை மாவட்ட _மாநிலச்செயற்குழு உறுப்பினர் தோழர்.சீனிவாசன்_ அவர்களுக்கும் _நெஞ்சார்ந்த நன்றியினை புதுக்கோட்டை மாவட்டக்கிளை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்._*
*_மாவட்டச்செயலாளர்,_*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - புதுக்கோட்டை*
*செய்தி பகிர்வு:*
*_TNPTF விழுதுகள்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment