Monday, 18 March 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி உடனான சந்திப்பு நிகழ்வு குறித்து பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_18.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்,*


*⚡மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்களும்,*


*⚡மாநில பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்_ அவர்களும்,*


*⚡மாநில பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ அவர்களும்,*


*⚡துணைப் பொதுச்செயலாளர் _தோழர். கணேசன்_ அவர்களும்,*


*இன்று (18.03.2019) திங்கட்கிழமை முற்பகலில் DPI வளாகத்தில்,*


*⚡தொடக்கக்கல்வி இயக்குநர் _திரு.கருப்பசாமி_ அவர்களை சந்தித்து பல்வேறு மாவட்ட ஆசிரியர்கள் பிரச்சினைகள் தொடர்பாக மணு அளிக்கப்பட்டடது.*


*🌟தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பின் போது பல்வேறு மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தார்கள்*


*🌟இன்று (18.03.2019) பிற்பகலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில நிர்வாகிகள்,*


*⚡தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் _திரு.சத்யபிரதாசாஹு_ அவர்களை சந்தித்து,*


*🌟2019 பாராளுமன்ற தேர்தல் பணியில் வாக்குசாவடி அலுவலர்களாக ஆசிரியர்களை பணியமர்த்துதல் மற்றும் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் எங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை பரிசீலனை செய்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடக் கோரி கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது.*



*_தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரப்பட்ட கோரிக்கைகள்_*


*🌟தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களின் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்ணாசிரியர்களாகப் பணிபுரியும் சூழ்நிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி செய்திட உள்ள நிலையிலும், அவர்களின் பாதுகாப்பு கருதியும், பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணியில் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள எங்களது மாநில அமைப்பில் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைiளை கனிவான பரிசீலனைக்கு தங்கள் முன் வைக்கிறோம்.*


*🌟1.கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் பணிபுரியும் பாராளுமன்றத் தொகுதி விடுத்து, அடுத்த பாராளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலர் பணி வழங்கியதால் பல்வேறு இன்னல்களை குறிப்பாக பெண்ணாசிரியர்கள் அடைந்தனர்.  நூறு சதவீதம் நேர்மையாகவும், எங்களுடைய நடத்தை விதிகளும், தேர்தல் ஆணைய நடைமுறைகளும் தெரிந்துள்ள நிலையில் வேறு ஏதேனும் தவறு செய்திட வாய்ப்பு இல்லாத சூழலில் தாங்கள் பணிபுரியும் சட்டமன்றத் தொகுதிக்கு அருகில் உள்ள சட்டமன்றத் தொகுதியில் பணியாணை வழங்கி உதவிடக் கேட்டுக் கொள்கிறோம்.*


*🌟2.நாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பெரும்பாலோருக்கு மாவட்ட அளவில் உள்ள தேர்தல் அலுவலர்களால் உரிய நேரத்தில் தபால் வாக்கு வழங்காத நிலையில் தேர்தல் பணிக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கடந்தத் தேர்தலில் மறுக்கப்பட்டது.  அத்தகைய நிலை ஏற்படாமல் தபால் வாக்கை விரைந்து செலுத்திடவும், மேலும் வாக்களிக்க எளிமையான நடைமுறைகளை உருவாக்கிடவும் வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.*


*🌟3.வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் கடந்த காலங்களில் அவர்களின் பணியிடத்தின் அடிப்படையிலும் தர ஊதியத்தின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது.  ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அவர்களுடைய மொத்தப் பணிக்காலம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு வாக்குசாவடி அலுவலர் நியமனம் செய்திட உரிய வழிகாட்டுதலை வழங்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.*


*🌟4. போக்குவரத்து வசதியில்லாத இடங்களில் பணிபுரியச் செல்லும் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கும், பணிமுடித்து வீடு திரும்புவதற்கும் அந்தந்த ZONAL TEAM உடன் ஒரு வாகனத்தையும் ஏற்பாடு செய்து உதவிடுமாறும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திடவும் வேண்டுமென மாநில அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.*



*🌟5.வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு குடிநீர், கழிப்பறை, உணவு போன்றவற்றிற்கு அந்தந்த கிராமநிர்வாக அலுவலர்கள் மூலம் உரிய ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்திடுவதை உறுதிப்படுத்திட வேண்டுகிறோம்.*


*🌟6. வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உதவிடவும் மாநில அமைப்பின் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.*


*🌟7.வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறோம்.*

*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: