*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_19.html
*_பேரன்புக்குரிய பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் (17.03.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் _மாநில தலைவர் தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*
*⚡மாநில செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:*
*_தீர்மானம் : 1_*
*🌟புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வட்டாரச் செயற்குழு உறுப்பினர் தோழர். சிவா, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டார துணைத்தலைவர் தோழர்.முருகன், நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டார செயற்குழு உறுப்பினர் தோழர்.தமிழரசன்இ தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் ஊரகம் பொருளாளர் திருமதி.சி.ஆர்.உஷாராணி ஆகியோர் மறைவுக்கு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.*
*_தீர்மானம் : 2_*
*🌟2018 அக்டோபர் முதல் 2019 பிப்ரவரி வரை உள்ள இயக்க வரவு - செலவு எழுத்து மூலமான அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்பு செய்யப்பட்டது.*
*_தீர்மானம் : 3_*
*🌟ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையிலும்இ ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்ப நலன் கருதியும் திரும்பப் பெற வேண்டும் என இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது*
*_தீர்மானம் : 4_*
*🌟தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறுதிவரை உறுதியாக நின்று 30.01.2019 வரை வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு வரலாறு படைத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் கட்டாயமாக வழங்கப்பட்டுள்ள பணியிட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்வதோடு, அவர்களை 21.01.2019 அன்று பணியில் இருந்த இடத்தில் மீண்டும் பணியில் அமர்த்திட வேண்டும் என தமிழக அரசை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம்: 5_*
*🌟தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்தவும், சுயநிதிப்பள்ளிகளுக்கு இணையாக வளர்ச்சி பெறவும் ஏதுவாக, 2019-2020 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பள்ளிகளுடன் இணைந்த முன்பருவ வகுப்புகளைத் துவக்கிடவும், அவற்றில் முன்பருவக்கல்விக்கான ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்திடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள இம்மாநிலச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*
*_தீர்மானம்: 6_*
*🌟அகில இந்திய அளவிலான கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் 19.02.2019 அன்று புதுதில்லியில் நடைபெற்ற கல்விப் பாதுகாப்புப் பேரணியில் பங்கேற்ற 217 இயக்க உறுப்பினர்களுக்கும் இம்மாநிலச்செயற்குழு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.*
*_தீர்மானம்: 7_*
*🌟5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்பது உளவியல் ரீதியாக மாணவர்களைப் பாதிக்கக்கூடியது என்பதாலும், இடைநிற்றலை அதிகப்படுத்தும் செயல் என்பதாலும் தமிழக அரசு அவ்வாறு தேர்வு நடத்தும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் எனவும்இ 1 முதல் 8ம் வகுப்பு வரை “அனைவரும் தேர்ச்சி ” என்ற நிலை தொடரவேண்டும் எனவும் தமிழக அரசை இம்மாநிச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம்: 8_*
*🌟தமிழகமே வெட்கிக் தலைகுனியும் வகையில் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் மீது சட்டரீதியாக மிகக்கடுமையான உச்சபட்ச நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்வதோடுஇ இதுபோன்ற இழிசெயல்கள் இனிமேலும் நடைபெறாவண்ணம் தடுத்து நிறுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம்: 9_*
*🌟நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி தேர்தல் பணி அளிக்கக்கூடாது எனவும், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் தங்கள் வாக்கைச் செலுத்துவதற்கு உரிய வாய்ப்புத் தரப்பட வேண்டுமெனவும்இ தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் உரிய பாதுகாப்பும், அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டுமெனவும்இ மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி அவர்களை மாநிலச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது*
*_தீர்மானம்: 10_*
*🌟சமக்ர சிக்ச அபியான் திட்டத்தின் மூலம் நடுநிலைப்பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் வாங்கிடவும், மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காகவும் வழங்கப்பட்ட ரூ 10000 மற்றும் ரூ 8000 ஆகியவற்றை விதிகளின்படி பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானத்தின்படி செலவழித்து புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்க அனுமதிக்காமல்இ நேரடியாக கல்வித்துறையே ஒரு நிறுவனத்தின் மூலமாக பள்ளிகளுக்கு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி தொகைக்கான காசோலையை தலைமை ஆசிரியர்களைக் கொடுக்க கட்டாயப்படுத்தியது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்நிகழ்வு பள்ளி மேலாண்மைக்குழுவின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும், திட்டத்தின் நோக்கத்தைச் சிதைப்பதாகவும், ஊழல் முறைகேட்டுக்கு காரணமாகவும் அமைந்துள்ளதால் இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்திட மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம்: 11_*
*🌟ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆகியவற்றில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் அதிகாரம் கடந்த காலங்களில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரிடம் இருந்ததால் பதவி உயர்வும், பணிமாறுதலும் பெறமுடிந்தது. ஆனால், விதிகளுக்கு முரணாக கடந்த சில ஆண்டுகளாக ஆதிதிராவிட நலத்துறை இயக்குநரே பொதுமாறுதல் ஆணைகள் வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளதால்இ கடந்த சில ஆண்டுகளாக மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், விடுதிகளில் ஒரே காப்பாளரே 2 அல்லது 3 விடுதிகளில் கூடுதல் பொறுப்பாக பணி செய்யக்கூடிய நிலை உள்ளது. விடுதிக் காப்பாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மாறுதல் கலந்தாய்வே நடத்தப்படாமல் உள்ளது. எனவே, கடந்த காலங்களைப் போலவே நியமன அலுவலரான மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கே மாறுதல் ஆணைகள் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment