Monday, 8 April 2019

*10 ஆண்டுகளாக தேர்தல் பணிக்கு வழங்கும் மதிப்பூதியத்தில் மாற்றமில்லை. _ஆசிரியர்கள் அதிருப்தி_*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/04/10.html


*🌟தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நாடளுமன்றம் மற்றும் 18 சட்டமன்றங்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இப்பணிக்கு வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி முடிவடைந்துள்ளது. மூன்றாம் கட்ட பயிற்சி வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பின் ஏப்ரல் 17ம் தேதி நடைபெற உள்ள பயிற்சியில் அவர்கள் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடிக்கான உத்தரவு வழங்கப்படும். அன்று மாலைக்குள் தாங்கள் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனைத்து அலுவலர்களும் செல்ல வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ள அனைவருக்கும் பயிற்சி மற்றும் வாக்குப்பதிவு நாள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் போக்குவரத்து படி மற்றும் உணவு படி உள்ளடங்கிய மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த ஊதியம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தி வழங்கப்படாததால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.*


*_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர்.முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;_*


*🌟தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் நான்கு நாள் பயிற்சி அளிக்கப்படும். அத்துடன் வாக்குப்பதிவு அன்று பணியாற்றிய பின் மறு நாள்தான் வீடு திரும்ப முடியும்.*


*🌟இதற்காக வழங்கப்படும் மதிப்பூதியம் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு ரூபாய் 5000ம், வாக்குச்சாவடி அலுவலர் 1க்கு ரூபாய் 4000ம், மற்ற அலுவலர்களுக்கு ரூபாய் 3000 எனவும் செய்திகள் வெளியாகியது.*


*🌟இந்நிலையில் தற்பொழுது தேர்தல் ஆணையத்தின் பெயரில் வெளியாகியுள்ள பட்டியலில் வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு பயிற்சி கட்டணமாக ரூபாய் 1050ம், வாக்குப்பதிவுக்கு  முந்தைய நாள் 350ம், வாக்குப்பதிவு அன்று 350ம், உணவு படியாக 300ம் சேர்த்து மொத்தம் ரூபாய் 2050 வழங்கப்படும் எனவும், வாக்குப்பதிவு அலுவலர் 1ற்கு பயிற்சி கட்டணமாக ரூபாய் 750ம், வாக்குப்பதிவுக்கு  முந்தைய நாள் 250ம், வாக்குப்பதிவு அன்று 250ம், உணவு படியாக 300ம் சேர்த்து மொத்தம் ரூபாய் 1550 எனவும் மற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ரூபாய் 1300ம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*🌟இத்தொகையானது ஊதியக்குழு அமுல்படுத்துவதற்கு முன் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் தொகையாகும். தற்பொழுது ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்ட பின்னால் திருத்திய புதிய ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்கான மதிப்பூதியத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பழைய ஊதியம் வழங்குவது ஏற்புடையதல்ல.*


*🌟தேர்தல் பணியில் 80 சதவீதத்திற்கு மேல் பெண் ஆசிரியர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு போக்குவரத்து வசதி எதுவும் ஆணையத்தால் செய்து தருவதில்லை. எனவே மதிப்பூதியத்தை உயர்த்தி தருவதுடன் வாக்குப்பதிவு மையத்தில் அச்சமின்றி பணியாற்றவும், போக்குவரத்து வசதி செய்து தரக்கோரியும் மாநிலத் தேர்தல் ஆணையர் அவர்களை எங்கள் மாநில அமைப்பு நேரிடையாக சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.*




*🤝தோழமையுடன்;*


*_முத்துப்பாண்டியன்,_*

*மாவட்ட செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*சிவகங்கை மாவட்டம்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: