Monday, 8 April 2019

*நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேர்வுநிலை/சிறப்புநிலை தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு-தொடக்கக்கல்வித்துறை விரைந்து நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post_8.html


*மாநிலஅமைப்பின் செய்தி அறிக்கை எண் : 7/2019*

*_நாள் : 08.04.2019_*



*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை*


*🌟01.06.1988-ல் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்களுக்கு  அரசாணை எண் :  210 ( பள்ளிக்கல்வி (ஜி) துறை ) நாள் : 14.08.2009-ன் படி 01.06.1988-க்கு முந்தைய பணிக்காலம் முழுவதையும் கணக்கிட்டு தேர்வுநிலை/ சிறப்புநிலை வழங்காத தமிழக அரசை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் _திரு.செ.நடேசன்_ மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலத் தலைவர் _திரு.மா.ச.முனுசாமி_ ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு W.P.NO : 3263/2012-ல் தலைமை ஆசிரியர்களுக்குச் சாதகான தீர்ப்பு 18.06.2015 அன்று வழங்கப்பட்டது.*


*🌟ஆனால் மேற்படி தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கைத் தாக்கல் செய்தது.  அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட W.A.NO : 34/2017 முதல் 1816/2017 முடிய உள்ள வழக்குகள் 03.01.2019 நாளிட்ட தீர்ப்பாணையின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதோடு சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988 முதல் பணிக்கால நிலுவைத் தொகையையும், ஓய்வூதியத்தை திருத்தியமைத்து நிலுவைத் தொகையையும், குடும்ப ஓய்வூதியமாயின் அதற்குரிய பணப்பலன்களையும் 8 வார காலத்திற்குள் வழங்கிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*


*🌟வரலாற்றுச்சிறப்புமிக்க இத்தீர்ப்பை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாக வரவேற்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இதற்கான சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் _திரு.செ.நடேசன்,_ முன்னாள் மாநிலத் தலைவர் _திரு.மா.ச.முனுசாமி_ ஆகியோருக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது இத்தீர்ப்பின் மூலம் ஓய்வுபெற்ற பல நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.*


*🌟எனவே, பல ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு  பின் கிடைத்துள்ள இத்தீர்ப்பை காலதாமதமின்றி உடனடியாக அமல்படுத்தி உரியவர்களுக்கு உரிய பலன்கள் கிடைத்திட கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*


*🤝தோழமையுடன்;*

*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: