Saturday, 20 April 2019

*பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6, மத்திய கல்வி உதவித்தொகைத் திட்டம் - தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித்தேர்வு (NMMS-2019-20) தேர்வு நாள் - 15.12.2018 (நவம்பர் 2018)-தேர்வுமுடிவுகள் வெளியிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/04/6-nmms-2019-20-15122018-2018.html



*🌟புதுடெல்லி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்புச்செயலாளர் அவர்களின் கடிதம் எண்.F.No.1-7/2018-SS, நாள்-20.04.2018, கடிதத்தின் தொடர்ச்சியாக 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்தியகல்வி உதவித்தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித்தேர்வு (NMMSS) கடந்த 15.12.2018 (நவம்பர் 2018) அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவிகளுக்கு நடைபெற்றது.*


*🌟தமிழ்நாடு அரசு தேர்வுகள்துறை இயக்குநர் அவர்களின் கடித எண்- 241194/NMMSS/2018 நாள்- 10.04.2019 ன் படி மேற்குறிப்பிடப்பட்ட தேர்வில் பங்குபெற்ற கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப்பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டு, இத்தேர்வுப்பட்டியல் தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் இக்கடிதத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்காயி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.*


*🌟மேலும், இத்தேர்வில் தகுதிபெற்றுள்ள தேர்வர்கள் 9ஆம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர்நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*




*_NMMS RESULT மாவட்ட வாரியாக கீழே உள்ள link ல் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது, link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்._*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/1XXjgdJ0te-qaVVzwjlJCaDutodT4nkat/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: