🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post.html
*🌟முதலில் உறுதி மொழி படிவத்தில் (declaration Form) 13A ல் முன்,பின் என இரண்டு பக்கங்கள் இருக்கும்.*
*🌟முன்புறம் மட்டும் மேல்பகுதியில் வாக்கு சீட்டு எண்ணை (Ballot paper no) எழுதி கையெழுத்திட வேண்டும்*
*🌟கீழ்பகுதியில் உறுதிமொழி படிவத்தில் மேலொப்பம் இட (attestation) ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் இரண்டு தாசில்தார்கள் சீலுடன் ரெடியாக இருப்பார்கள்.*
*🌟இரண்டாவதாக வாக்கு சீட்டு உள்ள கவர் படிவம் - 13 B வாக்குசீட்டு (Ballot Paper) மடித்து வைக்கப்பட்டு இருக்கும்.*
*🌟அதன் கவர்மீது (Postal Ballot Paper cover 13 - B) வாக்கு சீட்டு எண் குறிப்பிட வேண்டும்*.
*_🎤🎤🎤மிக மிக கவனம்._*
*🌟வாக்கு சீட்டில் பந்துமுனைப் பேனாவால் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு நேரில் அந்த கட்டத்திற்குள் மட்டும் இருக்கும்படி ஒரே ஒரு டிக் √அடிக்கவும்.*
*🌟மை பேனாவால் டிக் அடித்து பின்பு மடிக்கும் போது ஒருவேளை மற்றோரு சின்னத்திலோ அல்லது மற்றொரு வேட்பாளருக்கு எதிராகவோ மை கசிந்து விட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்.*
*🌟எனவே டிக் √ குறியீட்டை மிக கவனமாக அடியுங்கள்.Over writing வேண்டாம்.*
*🌟சின்னத்தில் ஒரு டிக்,வேட்பாளர் பெயரில் ஒரு டிக் என இரண்டு டிக் அடித்து விடாதீர்கள்.*
*🌟பின்பு வாக்குசீட்டை தேர்தல் அலுவலர் எவ்வாறு மடித்து வைத்துள்ளாரோ அவ்வாறே மடித்து உள்ளே வைத்து கவரை ஒட்டி விடவும்*.
*🌟அடுத்து படிவம் - 13 C. இது ஒரு கவர். இதில் படிவம் 13A (உறுதிமொழி படிவம்) மற்றும் 13 -B வாக்குசீட்டை வைத்து ஒட்டப்பட்ட கவர் இரண்டையும் (Ballot paper உள்ளகவர்) இந்த 13 -C கவரினுள் வைத்து ஒட்ட வேண்டும்.*
*🌟இந்த கவரின் மீது இடது பக்க ஓரத்தில் signature of the sender என இருக்கும். இதன் மீதும் கண்டிப்பாக கையெழுத்து இடவேண்டும்.*
*🌟இல்லை என்றால் நமது ஓட்டு கவரினை பிரித்து பார்க்காமல் அப்படியே தூர வைத்து விடுவார்கள். நமது வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.*
*🌟நிறைவாக படிவம் 13-D. இது வாக்காளருக்கான வாக்களிக்க உதவும் வழிகாட்டி குறிப்பு (Information letter)*
*🌟இந்த படிவத்தின் இறுதியில் இரண்டு கோடுகள் இருக்கும். அதில் 08 am on 23.05.2019 என எழுத வேண்டும்*.
*_குறிப்பு:_*
*🌟ஒரு தேர்தல் பயிற்சி வகுப்பில் இரண்டு தாசில்தார்கள் Attest பண்ண சீலுடன் இருப்பார்கள்.*
*🌟நாம் வரிசையில் நின்று பொறுமையாக வாக்களிக்க வேண்டும்.*
*தபால் வாக்கு அளிக்கும் வழிமுறை - விளக்கங்கள் (காணொளி)*
👇👇👇👇👇👇👇👇👇👇
No comments:
Post a Comment