*போர்க்குணமிக்க நம் பேரியக்கத் தோழர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் கூர்மைப்படுத்தும் விதமாக நமது மாநில அமைப்பின் முடிவின்படி முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மண்ணில் மாநில அளவிலான “இயக்கப் பயிற்சி முகாம்” - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post_67.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 15/2019 நாள் : 30.04.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
🛡⚔
*🌟நாடாளுமன்றத் தேர்தல் என்னும் மிகப்பெரிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டு ஜனநாயகத்தின் அடுத்தகட்ட நகர்வை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். முன்னெப்போதுமில்லாத அளவிற்கு ஆசிரியப் பேரினம் மிகப்பெரிய அவமானங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரமிது. இதற்கு முன்பும் தமிழகத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசாங்கங்கள் இருந்ததுண்டு. ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுத்த அரசாங்கங்கள் இருந்ததுண்டு. ஆசிரியர்களைப் பேச்சுவார்த்தைக்குக்கூட அழைக்காத அரசாங்கங்கள் இருந்ததுண்டு. ஆனால் முதன்முறையாக ஆசிரியர்களை அவமானப்படுத்துகிற , அசிங்கப்படுத்துகிற, அவதூறு செய்கிற ஒரு அரசாங்கத்தை முதன்முறையாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.*
🛡⚔
*🌟சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு நூலகப்புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவற்றை வாங்கக் கொடுத்த பணத்தில்கூட நவீனமுறையில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்களை விட்டுவிட்டு பார்க்கும் வேலைக்கு சம்பளம் மட்டுமே பெறும் ஆசிரியர்களின் சொத்துவிபரங்களைச் சரிபார்க்க இடப்படும் உத்தரவுகள் வியப்பையும், வேதனையையும் தருகின்றன.*
🛡⚔
*🌟தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத 1500 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தப்போவதாக வரும் அறிவிப்புகள் நியாயமற்ற செயலாகும். 8 ஆண்டுகள் ஆசிரியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுதுவதற்கே போதிய வாய்ப்புகளை வழங்காமலும், போதுமான அளவில் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தாமலும் இதுபோன்ற முடிவுகளை எடுப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். மேற்படி 1500 ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்விலிருந்து தவிர்ப்பு வழங்கி அவர்கள் தொடர்ந்து பணியாற்றவும், ஊதியம் பெறவும் அனுமதிக்க வேண்டும். அதில் எவ்விதத் தடையும் ஏற்படுத்தக்கூடாது.*
🛡⚔
*🌟இவ்வாறு தமிழகத்தில் பல்வேறு நெருக்கடிகளைப் பல்வேறு முனைகளிலிருந்தும் சந்தித்து வரும் ஆசிரியப் பேரினம், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நெஞ்சுறுதியோடு நீதியை நிலைநாட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.*
🛡⚔
*🌟இத்தகைய களச்சூழலில், தமிழ்நாட்டு ஆசிரியர்களின் பாதுகாப்புக்கவசமாகவும், கேடயமாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் நம் பேரியக்கப் பதாகையை உயர்த்திப்பிடித்து நம் லட்சியப் பயணத்தை முன்னைக் காட்டிலும் வேகமாக முன்னெடுப்பதே இன்றைய அவசியத் தேவையாகும்.*
🛡⚔
*🌟அந்த வகையில் போர்க்குணமிக்க நம் பேரியக்கத் தோழர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் கூர்மைப்படுத்தும் விதமாக நமது மாநில அமைப்பின் முடிவின்படி 14.05.2019 மற்றும் 15.05.2019 ஆகிய இரு தினங்கள் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மண்ணில் மாநில அளவிலான “இயக்கப் பயிற்சி முகாம்” நடத்த மாநில அமைப்பு முடிவுசெய்துள்ளது.*
🛡⚔
*🌟இப்பயிற்சி முகாமில் தலைசிறந்த கல்வியாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், பல்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகிறார்கள். இந்நிகழ்வில் நம் பேரியக்கத்தின் மாநிலப் பொதுக்குழுவில் இடம்பெறும் தோழர்கள் (மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச்செயலாளர்கள், மாவட்டப்பொருளாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள்) மற்றும் வட்டாரச் செயலாளர்கள் பங்கேற்க வேண்டும். மேற்கண்ட பொறுப்பாளர்களுக்கு மாற்றாக வேறு பொறுப்பாளர்கள் முகாமில் கலந்து கொள்ள இயலாது. எனவே, மேற்குறித்த அனைத்துப் பொறுப்பாளர்களும் தவறாது பயிற்சி முகாமில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
🛡⚔
*🌟பயிற்சியில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் உணவு மற்றும் தங்குமிடச் செலவுகளுக்காக செலுத்தவேண்டிய கட்டணம் தொடர்பாக 06.05.2019 அன்று மதுரையில் நடைபெறும் மாநிலச்செயற்குழுவில் முடிவு செய்யப்படும். மாவட்டச்செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திலிருந்து பயிற்சி முகாமில் கலந்துகொள்பவர்களின் பெயர்ப்பட்டியலை எதிர்வரும் மாநிலச் செயற்குழுவில் அளிப்பதோடு, சூழல் கருதி கலந்து கொள்பவர்களுக்கு தலா ரூ500-வீதம் முண்பணமாகவும் அளித்து உதவிடவும் அன்புடன் வேண்டுகிறோம்.*
*“அக்கினி வெயிலையும் தோற்கடிக்கும் அக்கினிக் குஞ்சுகளாய் ஆர்த்தெழுவோம் குமரிநோக்கி”*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment