*தேர்தல் பணி, மதிப்பூதியம், வாகன வசதி, தபால் ஓட்டு & வாக்களித்தல் குறித்த TNPTF பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/tnptf.html
*TNPTF பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 15/2019*
*நாள் : 14.04.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
✉🎤
*🌟நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் மற்றும் சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் பணிக்குச் செல்வதற்கான பயிற்சி வகுப்புகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றுள்ளன.*
✉🎤
*🌟தேர்தல் பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆளும் கட்சி கூறியது. கற்பித்தல் பணி தவிர வேறு எந்தப் பணிக்கும் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை. நம்முடைய நியாயமான உரிமைகள் தொடர்பான எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற முன்வராத ஆளும் தரப்பினர் இந்த கோரிக்கையையாவது நிறைவேற்ற முன் வந்ததில் மகிழ்ச்சி நமக்கு.*
✉🎤
*🌟ஆனால் ஆசிரியர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது என்ற உண்மையை உணர்ந்த தேர்தல் ஆணையம் அக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை.*
✉🎤
*🌟தேர்தல் மட்டுமின்றி மக்கள் தொகை கணக்கெடுப்பு, பொருளாதாரக் கணக்கெடுப்பு, குடும்ப அட்டை கணக்கெடுப்பு ,வாக்காளர் சேர்க்கை நீக்கல் பணி, ஆதார் அட்டை கணக்கெடுப்பு என்று எந்த பணியையும் ஆசிரியர்கள் இல்லாமல் இங்கு செய்துவிட முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.*
✉🎤
*🌟கற்பித்தல் அல்லாத இதுபோன்ற பணிகளை மிகக் குறைந்த மதிப்பூதியத்தில் ஆசிரியர்களைக் கொண்டு செய்வதும், செய்ய மறுத்தால் நடவடிக்கை பாயும் என்று மிரட்டுவதும் காலங்காலமாக இங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. உண்மையில் இதுவும் உழைப்புச் சுரண்டலே. இத்தகு நிலைக்கு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலும் விதிவிலக்கல்ல.*
✉🎤
*🌟18.04.2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் என்பது மிகக் குறைவானது. பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கிய மதிப்பூதியத்தையே தற்போதும் வழங்குதல் என்பது நியாயத்துக்குப் புறம்பானதாகும்*
✉🎤
*🌟தேர்தல் பணிக்குச் செல்லும் ஒரு ஆசிரியருக்கு அவர் பணிபுரியும் இடத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 முதல் 75 கிலோ மீட்டர் தூரத்தில் மூன்று பயிற்சி வகுப்புகள், சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் தேர்தல் பணி, தேர்தல் பணியாற்றும் இடத்தில் இரண்டு நாள்கள் இருந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பணியாற்ற வேண்டிய நிலை என்று இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்வதேயில்லை.*
✉🎤
*🌟கர்ப்பிணிகள், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை போன்ற பெரிய அளவிலான சிகிச்சை மேற்கொள்பவர்கள் / மேற்கொண்டவர்கள், தேர்தல் பணி செய்ய இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கைக் குழந்தையுடன் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் என்று எவரையும் விட்டுவைக்காமல் மனிதாபிமானமின்றி தேர்தல் பணி ஆணைகளை வழங்குவதும், அவைகளை உடல் நிலையைக் காரணம்காட்டி ஏற்காதவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி மிரட்டுவதும் தேர்தல் ஆணையத்தின் மனிதாபிமானமற்ற செயலுக்கு உதாரணங்களாகும்.*
✉🎤
*🌟தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு தொடர்பான கருவிகள் மற்றும் ஆவணங்களை ஒப்படைப்பதற்கு பெரும்பாலும் நள்ளிரவு ஆன நிலையிலும் வாக்குச்சாவடியில் பணியாற்றும் பெண்களை நிற்கதியாய் விட்டுச் செல்வதை இந்த தேர்தலிலாவது தேர்தல் ஆணையம் பரிசீலித்து, வாக்குச்சாவடிக்கு செல்வதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து பிரதான பேருந்து நிலையத்திற்கு வருவதற்கும் வாகன ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு 100% தேர்தல் ஆணையமே பொறுப்பு என்பதை உணர்ந்து இந்த ஏற்பாட்டைச் செய்திட வேண்டும்.*
✉🎤
*🌟மேலும் 100% வாக்குப்பதிவை அடைய முயற்சி மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையம் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் 100% வாக்குப்பதிவு செய்வதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்காகத் தேர்தல் பணியாளர்களுக்குத் தபால் வாக்குகள் அல்லது தேர்தல் பணிச் சான்று மூலம் வாக்களித்தலுக்கு 100% வாய்ப்பு அளிக்க வேண்டும்.*
✉🎤
*🌟கடந்த சில நாட்களாக தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மிகக் கடுமையான முயற்சிக்குப் பின்னர் 13.04.2019 பயிற்சி வகுப்பில் பெருமளவு தபால் வாக்குகள் & தேர்தல் பணிச் சான்றுகளைப் பெற்றுள்ளனர்.*
✉🎤
*🌟ஆனால் இன்னும் பலருக்கு தபால் வாக்கு மற்றும் தேர்தல் பணிச் சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.*
✉🎤
*🌟எனவே, 15.04.2019-ற்குள் அனைத்துத் தேர்தல் பணியாளர்களுக்கும் தபால் வாக்குகள் / தேர்தல் பணிச் சான்றுகள் வழங்கிட உடனடி நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.*
✉🎤
*🌟இப்பிரச்சினையில் நம் இயக்கத் தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, 15.04.2019-ற்குள் அனைத்துத் தேர்தல் பணியாளர்களுக்கும் தபால் வாக்கு அல்லது தேர்தல் பணிச் சான்று பெற்றுத்தர விரைந்து செயலாற்ற வேண்டும்.*
✉🎤
*🌟அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டையே நிர்வகிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்த நாடாளுமன்றத் தேர்தலில், நாம் அளிக்கப்போகும் வாக்கு விலைமதிப்பில்லாதது.*
✉🎤
*🌟தமிழ்நாட்டின் ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் & தேச நலன் ஆகியவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் நம் பேரியக்கத்தின் தோழர்கள், விலைமதிப்பற்ற வாக்குகளை விலை பேசி வாங்க துடிக்கும் அரசியல் வியாபாரிகளையும், வாக்கு அரசியலுக்காக மக்களை ஜாதி மதம் என்ற பெயரில் பிரித்தாள நினைக்கும் சுயநல சக்திகளையும் அடையாளம் கண்டு அவற்றைத் தகர்த்தெறியும் நோக்கில் தமது விலைமதிப்பற்ற வாக்கினை அளித்துத் தேச நலன் காக்கும் அரசை தேர்ந்தெடுப்பதில் நம் ஜனநாயகக் கடமையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.*
*அரசியலில் நீங்கள்*
*தலையிடவில்லை என்றால்,*
*அது உங்கள் வாழ்க்கையில்*
*தலையிடும்*
*- புரட்சியாளர் லெனின்*
சென்னை.
14.04.2019
🤝தோழமையுடன்,
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment