*பள்ளிக்கல்வி - அனைத்து வகை பள்ளிகளிலும் 2019-2020 ம் கல்வியாண்டு முதல், பள்ளி, மாணாக்கர் மற்றும் ஆசிரியர் சார்ந்து மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தின் (EMIS web portal) மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் - 2019-2020 மாணவர் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறுபள்ளிக்குமாற்றம்/ நீக்கம் பதிவுகளை எப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறை கடிதம் வெளியிட்டுள்ளார்.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/2019-2020-emis-web-portal-2019-2020.html
🖥📱
*🌟ந.க.எண்:56/கே/இ1/2019 நாள்: 08.03.2019 மற்றும் 01.04.2019 ன் செயல்முறை கடிதத்தின்படி, 2018-2019 கல்வியாண்டின் இறுதியிலேயே அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி முதலே எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை 2019-20 ம் கல்வியாண்டிற்கு மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.*
🖥📱
*🌟மேலும், அனைத்து வகை பள்ளிகளிலும் புதிய மாணவர்களின் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறுபள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் ஆகிய அன்றாட பணிகளை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) உள்ளீடு செய்து சார்ந்த பள்ளிகள் இணையதளத்தினை பராமரித்து வருகின்றனவா என்பது அவ்வப்போது மேற்பார்வை செய்யப்படவேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பாக கீழ்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.*
🖥📱
*🌟2018-2019 கல்வியாண்டில் மாணவர்கள் தேர்ச்சியினை இணையதளத்தில் பதிவு செய்தல்/ வேறு பள்ளிக்கு மாற்றம் செய்தல்:*
*🌟கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) 2018-2019 கல்வியாண்டிலிருந்து 2019-2020 கல்வியாண்டிற்கு மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் பணி பள்ளி அளவில் தலைமையாசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும். வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக மாணவர் தேர்ச்சி அளிப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.*
🖥📱
*⚡http://emis.tnschools.gov.in/Home/emis_school_dash எனும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS), மேற்காணும் இணைப்பின் மூலம் தோன்றும் கீழ்காணும் பக்கத்தில் பெறப்படும் ஒவ்வொரு வகுப்பு மற்றும் ஒவ்வொரு பிரிவு வாரியான மாணவர் பட்டியலை பெற வேண்டும்.*
🖥📱
*⚡பெறப்பட்ட மாணவர் பட்டியில் தலைப்பில் இடது புறமுள்ள Select All மற்றும் வலதுபுறமுள்ள Promote / Transfer என்ற விருப்பத்தினை தெரிவு செய்து பட்டியலின் இறுதியில் உள்ள Submit செய்வதன் மூலம் இப்பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய இயலும்.*
🖥📱
*⚡Submit செய்தவுடன் Promote செய்வதற்கும் Movie to Common Poll செய்வதற்கும் என இரண்டு விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். Promote விருப்பத் தெரிவு செய்யும் போது இம்மாணவர்களை சேர்க்க வேண்டிய அடுத்த வகுப்பு மற்றும் பிரிவு தெரிவு செய்து Submit செய்தவுடன் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அளிக்கப்பட்டுவிடுவர். பள்ளியின் இறுதி வகுப்பிலுள்ள மாணவர்களை (terminal calss student) மாணவர்களை பொறுத்தவரை Move to Common Poll என்ற விருப்பத்தினை தெரிவு செய்ய வேண்டும். அப்போது தான் அம்மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கை பெற இயலும்.*
🖥📱
*🌟2019 - 2020 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கை:*
*⚡கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) முகப்பு பக்கத்தில் அமைந்துள்ள Student/ Student Admission என்ற இணைப்பின் மூலம் அணைத்து விதமான பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை பணியினை மேற்கொள்ள வேண்டும்.*
🖥📱
*⚡மேற்காணும் இணைப்பின் மூலம் பெறப்படும் இணைய பக்கத்தில் LKG மற்றும் 1 ம் வகுப்புகளுக்கு புதிய மாணவர்களைச் சேர்க்கவும் மற்றும் மற்ற வகுப்புகளுக்கு பிற பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களை சேர்க்கவும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் New students registration என்ற இணைப்பின் மூலம் LKG மற்றும் 1 ம் வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கலாம்.*
🖥📱
*⚡பிற பள்ளிகளிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு முடித்து (Terminal class students) மேல்வகுப்பு கல்வி பயில வரும் மாணவர்கள் 6,9,11 வகுப்புகளிலும் மற்றும் பொது மாறுதல்களால் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு சேர்க்கை கோரும் மாணவர்களை Admit students for common poll என்ற பின்வரும் இணைப்பினை பயன்படுத்தி உரிய வகுப்பில் சேர்க்க வேண்டும்.*
🖥📱
*⚡மேற்காணும் இணைப்பினை பயன்படுத்தும் போது மாணவர்களின் எண், பெற்றோர் கைப்பேசி எண், ஆதார், பள்ளியின் UDISE ஆகியவற்றினை உள்ளீடு செய்து மாணவர் பொது தொகுப்பிலிருந்து வேறொரு பள்ளி மாணவரை சேர்க்கலாம்.*
🖥📱
*⚡மேற்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் LKG மற்றும் 1 ம் வகுப்புகளுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கைக்கும், 6 மற்றும் 9 வகுப்புகளில் தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.*
🖥📱
*⚡அரசுப் பள்ளிகளில் 11 ம் வகுப்பில் மாணவர்கள் சேரிக்கையினைப் பொருத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வருவதற்கு முன்னரே முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 11ம் வகுப்பில் தற்காலிகமாக சேர்க்கை அனுமதி வழங்கலாம் எனவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வந்த பின்னர் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் கோரும் பாடப்பிரிவினை வழங்குவது குறித்து பரிசீலித்து தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் எனவும், 11ம் வகுப்பில் மாணவரின் பாடப்பிரிவினை பின்னர் உள்ளீடு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.*
🖥📱
*🌟எனவே, அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையினை 2019-20ம் கல்வியாண்டில் அதிகரிக்க அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மாணவர்கள் சேர்க்கை / நீக்கத்தின் போது கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) அதற்கான பதிவுகளை உடனுக்குடன் உள்ளீடு செய்ய அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவித்து பணிகளை கண்காணிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.*
*🌟மேலும் இது தொடர்பான விபரங்களை புகைப்படத்துடன் அறிய கீழே உள்ள link ஐ கிளிக் செய்து காணலாம் தோழர்களே!*
*👇👇👇👇👇👇👇👇*
https://tnptfayan.blogspot.com/2019/04/2019-2020-emis-web-portal-2019-2020.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment