Wednesday, 10 April 2019

*பிரான்ஸில் சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசுப் பள்ளி ஆசிரியர்!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post_30.html


*🌟பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கல்வியாளர்களுக்கான சர்வதேச கருத்தரங்கில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் திரு.ஸ்ரீ.திலிப் அவர்கள் கலந்து கொண்டு தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து உரையாற்றினார்.*


*🌟ஏப்ரல் 1 முதல் 5-ஆம் தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கல்வியாளர்களுக்கான சர்வதேசகருத்தரங்கில் இந்தியாவில் இருந்து 13 பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.*


*🌟தமிழகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.ஸ்ரீ திலிப் அவர்கள் கலந்து கொண்டு, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து விளக்கிக் கூறினார். மேலும், 5 நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராகவும், ஆசிரியர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிக்கு நடுவராகவும் அவர் செயல்பட்டார்.*


*🌟இந்தக் கருத்தரங்கில் 110 -க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 300-க்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்கள் நாட்டின் கல்வி முறைகள் குறித்து விளக்கிக் கூறினர்.*


*🌟குறிப்பாக, கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு குறித்தும், தங்களின் வகுப்பறையில் பயன்படுத்தப்படும் புதிய முறைகள் குறித்தும் காட்சிப்படுத்தி இதில், தமிழக ஆசிரியர்கள் சிறப்பாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வதேச கல்விக்கான தலைமை அலுவலர் திரு.அந்தோணிசால் சிட்டோ பாராட்டினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: