Wednesday, 5 June 2019

*ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் - கனவு ஆசிரியர் _சைமன் பீட்டர் பால்_*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_74.html



*_மனிதனுக்குள் இயற்கையாகவே புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிகொண்டு வருவது எதுவோ, அதுவே கல்வி என்கிறார் -சுவாமி விவேகானந்தர்.*

⛎♈🅰

*🖥அந்த வார்த்தைகளுக்கேற்ப, படைப்பாற்றலுடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு கற்பித்தலில் ஆசிரியர்கள் பலரும் ஏராளமான புதுமைகள் புகுத்தி வருகின்றனர். அந்த வகையில், மாணவர்களுக்குள் புதைந்திருக்கும் கற்பனை மற்றும் படைப்பாற்றல் திறமைகளை தன்னுடைய சிறப்பான கற்பித்தல் திறன் மூலம் வெளிக்கொணர்கிறார், பாண்டிச்சேரி மங்களம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் _சைமன் பீட்டர் பால்,_*


❓❓❓❓❓

*_"அப்படியென்ன சிறப்பு இவரிடம்?"_*

❓❓❓❓❓


*என நீங்கள் கேட்டால்,*

⛎♈🅰

*🖥வகுப்பறை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், கற்றலில் புதுமை, மொழி ஆளுமை, தொழில்நுட்ப உதவியுடன் கூடிய வகுப்பறை செயல்பாடுகள், களப்பயணம் மூலம் கற்பித்தல் உள்ளிட்டவை இவரின் புதுமையான வகுப்பறையின் சிறப்பு அம்சங்கள்!*


⛎♈🅰

*🖥கற்பித்தலில் தொழில்நுட்பத்தைப் புகுத்தி, மாணவர்களுக்குப் புதுமையான கற்றல் அனுபவத்தை வழங்கியதற்காக மத்திய அரசு இவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது (National ICT award) 2015-ல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் புதுவையின் முதல் ICT விருதாளர் இவர் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது!*


⛎♈🅰

*🖥இதுமட்டுமின்றி தான் கற்றறிந்த புதுமைகளைத் தன்னோடு மட்டும்  வைத்துக்கொள்ளாமல், பிற ஆசிரியர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் UTA (UNIVERSAL TEACHERS ACADEMY) என்ற அமைப்பை 2009-ம் வருடம் தொடங்கி, பயிற்சிகளை தொடர்ந்து அளித்து வருகிறார்.*


⛎♈🅰

*🖥இந்த அமைப்பின் வாயிலாக, காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் மாதம் ஒரு பயிற்சியை வழங்கி வருவதோடு, தமிழகமெங்கும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார்!*


⛎♈🅰

*🖥இந்த பயிற்சிகளில், தான் மட்டுமின்றி நாடெங்கிலும் உள்ள சிறந்த வல்லுநர்களை வரவழைத்து, அவர்களைக் கருத்தாளர்களாகவும் தேர்ந்த வழிகாட்டிகளாகவும் அடையாளம் காட்டி வருகிறார்.*


⛎♈🅰

*🖥தவிர, NCERT (தேசிய ஆராய்ச்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்) மூலம், தான் கற்ற புதுமைகளையும், பயிற்சிகளையும் தானாகவே முன்வந்து விரும்பும் ஆசிரியர்களுக்கு கற்பித்து வருகிறார்.*


⛎♈🅰

*🖥சைமன் பீட்டர் பால் அதிரடியான மற்றுமொரு செயல்பாடு UTA - NCERT என்ற வாட்ஸ்அப் குழு மூலம் NCERT முன்னெடுப்புகளையும் பயிற்சிகளையும் பிற ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்குகிறார். முக்கியமாக பயிற்சிக்குத் தேவையான பொருளாதாரத் தேவைகளையும் தனது சொந்த செலவிலேயே செய்துவருவதுதான் மிகவும் போற்றுதலுக்குரியதாக இருக்கிறது.*


⛎♈🅰

*🖥தன் பயிற்சியில் ஆசிரியர்களுக்கு வெறுமனே தொழில்நுட்பத்தை மட்டும் கொண்டுசேர்க்காமல், ஆராய்ச்சி கட்டுரைகளை எப்படி சமர்பிக்க வேண்டும் என்கிற பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.*


⛎♈🅰

*🖥இப்படி இவர் வழிகாட்டிய ஆசிரியர்களில் புதுவையைச் சேர்ந்த ஆசிரியர் சுகந்தி சேயாற்றின் தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பதே இவரின் முன்னெடுப்புகள் அனைத்தும் சிகரத்தை நோக்கி பயணிக்கின்றன என்பதற்கான ஆகச்சிறந்த அடையாளமாகும்!*  


⛎♈🅰

*🖥தான் கற்றதை எவ்வித தயக்கமும் இன்றி பிறருக்கு கற்பித்து அவர்களின் வகுப்பறை செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் _ஆசிரியர் சைமன்_*


⛎♈🅰

*🖥 _இவரின் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளில் மணிமகுடமாய் கருதப்படுவது Stop Motion Animation பயிற்சி._*


⛎♈🅰

*🖥அதனைத் தன்னைப்போல் கற்கும் ஆர்வமுள்ள ஆசிரியர்களிடத்தில் கொண்டுசென்று, அவர்களைக் கொண்டே அனிமேஷன் வீடியோக்களை தயாரித்து NCERT VIDEO AUDIO FESTIVAL போட்டியில் சமர்பித்து பரிசுகளை வெல்வதற்கு உற்ற துணையாக இருந்துள்ளார்.*



⛎♈🅰

*🖥இந்த பயிற்சியினை ஆசிரியர்களோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு கற்பித்தல், இவரின் ஆலோசனையின் படி, 'மனித உணவு மண்டலம்', 'நல்வழிக் கதைகள்' உள்ளிட்ட தலைப்புகளில் வீடியோக்களை மாணவர்களே தயாரித்து, NCERT யிடம் சமர்ப்பித்து, பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.*


⛎♈🅰

*🖥இது மட்டுமா.. இவர் பணிபுரியும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நாளிதழ்கள் மற்றும் நூல்கள் வாசித்தல், ஆங்கிலத்தில் தடையின்றி பேசுவதற்கு பயிற்சிகள் என்று ஆங்கில மொழி ஆளுமை வளர்ப்பதற்கான பயிற்சிகள் அளித்து வருகிறார். அவர்கள் தயாரிக்கும் வீடியோ காட்சிகளுக்கு அவர்களைக் கொண்டு ஆங்கிலத்தில் பின்னணி குறல் தரவும் பயிற்சியளித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்!*


🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂

*_அரசிடம் இவரின் எதிர்பார்ப்பு:_*

🤔🤔🤔🤔🤔


⛎♈🅰

*🖥"ஒரு ஆசிரியரிடம் உள்ள திறமைகளை, கற்று கொண்டுள்ள தொழில்நுட்பங்களைப் பிற ஆசிரியர்களும் கற்றுக்கொள்வதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை வழங்க அரசே முன் வர வேண்டும். இதன் மூலம் கற்பித்தலும் கற்றலும் சிறக்கும் என்கிறார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: