Wednesday, 12 June 2019

*TNPTF - அரசாணை எரிப்புப் போராட்டம் -17(ஆ) நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி அனுப்ப வேண்டிய மாதிரிக் கடிதம் - பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/tnptf-17.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 18, நாள் : 12.06.2019.*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்!*



🔥⚖️

*🌟தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்காக 26.11.2018 அன்று நம் பேரியக்கம் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நம் இயக்க தோழர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அந்த முதல் தகவல் அறிக்கையின் பேரில் அதில் இடம்பெற்ற நம் இயக்க தோழர்கள் மீது கல்வித்துறை 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது.*


🔥⚖️

*🌟இந்நிலையில் நம் மாநில அமைப்பு தொடுத்த வழக்குகளின் பேரில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட காவல்துறையின் முதல் தகவல் அறிக்கைகள் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையால் ரத்து (Squash) செய்யப்பட்டுள்ளது.*


🔥⚖️

*🌟மேலும் ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், விழுப்புரம், கடலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தீர்ப்பாணை கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது.*


🔥⚖️

*🌟மேற்கண்டவாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பாணை கிடைக்கப்பெற்ற மாவட்டங்களில் 17(ஆ) நடவடிக்கைக்கு உள்ளான நம் இயக்க தோழர்கள் அனைவரும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி கடிதத்தில் உள்ளவாறு, கடிதத்தை மிகச்சரியாக உரிய முறையில் நிறைவு செய்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பதிவு அஞ்சலில் ஒப்புகை அட்டையுடன் தனித்தனியே அனுப்பிட மாநில மையத்தின் சார்பில் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு மேற்கண்ட பணியினை முடித்திட தோழமையுடன் வேண்டுகிறோம்.*


🔥⚖️

*⚡இணைப்பு: 17(ஆ) ரத்து செய்யக்கோரி இரண்டு பக்க மாதிரி கடிதம்.*



🔥⚖️

*_மாதிரி கடித்தினை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் தோழர்களே.._*

👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/1-0Paja24nTX0wTrpu3QLUhSG8GIrASLq/view?usp=drivesdk



🤝தோழமையுடன்;

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: