🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_58.html
*🌟தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி துறை சார்பாக, கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் அரசு பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன செட்டாப் பாக்ஸ்கள் மூலம் ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.*
*🌟அதன்படி, முதற்கட்டமாக 6,172 எண்ணிக்கையிலான மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு HD செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளது.*
*🌟மாவட்ட துணை மேலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்குவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் கூட்டம் நடத்திடவும் மற்றும் அப்பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் இணைப்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.*
*🌟எனவே, அனைத்து மாவட்ட துணை மேலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் அணுகி மேற்படி கூட்டத்திற்கு உரிய நேரம் பெறவும் மற்றும் மேற்படி கூட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடத்தி, கேபிள் இணைப்பு பள்ளிகளுக்கு வழங்குவதை துரிதப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.*
*🌟மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களை கூட்டத்திற்கு அழைத்து உரிய விளக்கங்களை வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.*
*🌟மேலும், HD செட்டாப் பாக்ஸ்கள் கையிருப்பு உள்ள மாவட்டங்கள் அதனை பள்ளிகளுக்கு வழங்க பயன்படுத்திக்கொள்ளலாம். HD செட்டாப் பாக்ஸ் கையிருப்பு இல்லாத மாவட்டங்களுக்கு குடோன்களிலிருந்து HD செட்டாப் பாக்ஸ்கள் அனுப்பப்படும்,*
*🌟அதன் செலவினத்திற்காக ஒரு செட்டாப் பாக்கிற்கு ரூ.10/- வீதம் மாவட்ட துணை மேலாளர்களுக்கு முன்பணம் தொகை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment