Monday, 1 July 2019

*ஆசிரியர்கள் மீதான 17பி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் கோரிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/17.html


*🌟ஆசிரியர்கள் மீதான 17 பி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் கோரிக்கை விடுத்துள்ளார்.*


*🌟ஶ்ரீமுஷ்ணத்தில் ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. நேற்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்,_ மற்றும் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட ஆசிரியர் குடும்பத்திற்கு மாவட்ட கிளை சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினர்.*


*_பின்னர் மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் கூறியதாவது:_*


*🌟ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது 17பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது நடைபெற உள்ள பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது.*


*🌟தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான 17பி மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.*


*🌟வரும் 8ம் தேதி முதல் நடக்கும் பொதுமாறுதல் கலந்தாய்வில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற நிபந்தனை காரணமாக பெரும்பாலான ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிபந்தனையை தளர்த்த வேண்டும்.*


*🌟அங்கன்வாடிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விதமான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.*


*🌟மாநில துணைத்தலைவர் _தோழர். ரஹும்_ மாவட்ட செயலாளர்கள் _தோழர்.கிறிஸ்டோபர்,_ _தோழர்.சண்முகசாமி,_ மாவட்ட பொருளாளர்கள் _தோழர்.தண்டபாணி,_ _தோழர். சீனுவாசன், வட்டார தலைவர்கள் _தோழர்.ரவிசுந்தர்,_ _தோழர். ஜான்சன்,_ வட்டார செயலாளர்கள் _தோழர். சிற்றரசன்,_ _தோழர். ஆசைத்தம்பி,_ வட்டார பொருளாளர்கள் _தோழர்.குருராஜன்,_ _தோழர். ரோஸ்லீன் மேரி_ ஆகியோர் உடனிருந்தனர்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: