Wednesday, 3 July 2019

*பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post.html


*⚡1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்*


*⚡2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்*


*⚡3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டை ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும்.*


*⚡4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.*


*⚡5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.*


*⚡6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.*


*_ஆசிரியர் நலன்_*


*⚡7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.*


*⚡8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்.*


*⚡9) தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்.*


*⚡10) சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி*


*_மாணவர் நலன்_*


*⚡11) அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.39.25 கோடி செலவில் கற்றல் துணைக்கருவிகள் வழங்கப்படும்.*


*⚡12) திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ரூ. 2.93 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்*


*⚡13) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவில் மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்*


*⚡14) கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத்திருவிழா ரூ. 4 கோடி செலவில் நடத்தப்படும்.*


*⚡15) பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும்*


*⚡16) ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்*


*⚡17) மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும் கருத்தரங்குகள் ரூ. 2 கோடி செலவில் நடத்தப்படும்*


*_மின் ஆளுமை_*


*⚡18) காணொளி பாடங்கள், கணினி வழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.*


*⚡19) அரசுத்தேர்வுகள் இயக்கக செயல்பாடுகள் ரூ.2 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்*


*⚡20)மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணையவழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.*


*_நூலகம்_*


*⚡21) ரூ.25 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ரூ.5 கோடி செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும்*


*⚡22) அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ரூ.3.கோடி செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்*


*⚡23)தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்*


*⚡24)தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும்.*


*👉சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் – கீழடி, சிவகங்கை மாவட்டம்*

*👉தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் – தஞ்சாவூர்*

*👉நாட்டுப்புறக் கலைகள் - மதுரை*

*👉தமிழ் மருத்துவம் - திருநெல்வேலி*

*👉பழங்குடியினர் பண்பாடு - நீலகிரி*

*👉கணிதம், அறிவியல் - திருச்சி*

*👉வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் - கோயம்புத்தூர்*

*👉அச்சுக்கலை – சென்னை*


*⚡25) மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.72 இலட்சம் செலவில் அமைக்கப்படும்*


*⚡26) 123 முழுநேர கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன் கூடிய கணினி வசதி ரூ. 1.84 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்*


*⚡27) ரூ. 2. கோடி செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும்*


*⚡28) அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டம் தொடங்கப்படும்*


*⚡29) அரிய வகை நூல்களைப் பாதுகாத்து வரும் தனியார் அமைப்புகள் நடத்தி வரும் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்படும்*


*⚡30) நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ரூ.5 கோடி செலவில் மொழி பெயர்க்கப்படும்.*


*⚡31) அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்*



*_நிர்வாகம்_*


*⚡32) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் ரூ. 60 இலட்சம் செலவினத்தில் ஏற்படுத்தப்படும்*


*⚡33) _கிருஷ்ணகிரி_ (ம) _நாகப்பட்டினம்_ மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்*


*⚡34)பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர்களுக்கு ரூ.2.89 கோடி செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.*


*_முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி_*


*⚡35) 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் ரூ.13.94 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.*


*_உலகத் தமிழர் நலன்_*


*⚡36) உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தலுக்கு தேவையான தமிழ்ப் பாடநூல்கள் அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி மற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல் ஆகியவை அறிமுகம்.*


*⚡37) உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் ஒரு இலட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்குதல். முதற்கட்டமாக யாழ்ப்பாணம் பொது நுாலகத்திற்கும், மலேயாப் பல்கலைக் கழக நூலகத்திற்கும் ஒரு இலட்சம் நூல்கள் கொடையாக வழங்கப்படும்.*


*🌟அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில்லை என ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: