Saturday, 6 July 2019

*ஜாக்டோ ஜியோ உண்ணாநிலை அறப் போராட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_6.html


*🌟ஜாக்டோ ஜியோ தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்தினை ஈர்த்திட உண்ணாநிலை அறப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் 07/07/2019 (ஞாயிற்றுக்கிழமை மிகுந்த எழுச்சியோடு நடைபெற உள்ளது.*


*🌟ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஜாக்டோ ஜியோவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு முடிவின்படி  இப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.*


*_கோரிக்கைகள்:_*


*⚡பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும்.*


*⚡வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள், புனையப்பட்ட பொய் வழக்குகள், பழிதீர்க்கும் பணியிட மாறுதல்களை இரத்து செய்து மறுக்கப்படும் பதவி உயர்வினை வழங்கிட வேண்டும்.*


*⚡மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மு.சுப்பிரமணியன் அவர்களை பணி ஓய்வுபெறும் நாளில் பழிவாங்கும் நோக்கில் தற்காலிகப் பணிநீக்கம் செய்ததை இரத்து செய்ய வேண்டும்.*


*⚡வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 28.12.2018 ல்தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு இதுநாள் வரை மீளப் பணியமர்த்தப்படாமல் உள்ள திரு.கா.சின்னசாமி, மீன்வள மேற்பார்வையாளரை (கிருஷ்ணகிரி) மீளப்பணியமர்த்திட வேண்டும்.*


*⚡கல்லூரி பேராசிரியர்களின் தொலைதூரப் பணியிட மாற்றத்தினைத் திரும்பப் பெற்று அவர்களை முன்னர் பணியாற்றிய கல்லூரியிலேயே பணியமர்த்திட வேண்டும்.*

*⚡ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினரும், தலைமை ஆசிரியருமான திரு.பா.கரவிச்சந்திரனின் தற்காலிக பணிநீக்கத்தினை இரத்து செய்ய வேண்டும்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: