Sunday, 7 July 2019

*தலைமை ஆசிரியர்கள் பள்ளி நேரங்களில் விவரங்களை அளிக்க பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது, விவரங்களை EMIS இணையதளத்திலிருந்து பெற்று மின்னஞ்சல் மூலம் அனுப்ப அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/emis.html


*🌟பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்கள் மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி விவரங்கள் EMIS இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இத்தகைய விவரங்களை கோரும் போது EMIS இணையதளத்தின் மூலம் பெற்று அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*


*🌟இதனால் பள்ளி வேலை நேரங்களில் விவரங்களை பெறுவதற்காக தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டத்தினை நடத்த வேண்டிய அவசியம் எழாது, இதர முக்கியமான காரணங்களுக்கான ஆய்வு கூட்டத்தினை நடத்த வேண்டிய சூழ்நிலையில் சனிக்கிழமையிலோ அல்லது மாலை நேரங்களிலோ நடத்திடுமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*


*🌟மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் விவரங்களை அளிக்கவும் பெறவும் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் , மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகம் செல்வதை தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். இவ்வாறு செய்வதால் கல்வி பணிகள் பாதிக்காது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி நேரங்களில் விவரங்களை அளிக்க வெளியே செல்ல தவிர்க்குமாறு அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: