Sunday, 7 July 2019

*கலந்தாய்வில் பணப்பரிமாற்றம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_7.html


*🌟சிவகங்கை:ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பணப்பரிமாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரித்துள்ளது.*


*🌟தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுக்கான பதவி வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுஉள்ளது.வட்டாரக்கல்வி அலுவலர்கள், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்,பதவி உயர்வு,பணி நிரவல் ஆகியவை ஜூலை 8 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை குறிப்பிட்ட தேதிகளில் நடக்கிறது.*



*_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன் கூறியதாவது:_*


*🌟தொழில்நுட்ப கோளாறால் கலந்தாய்வு கடந்தாண்டைப் போல் நள்ளிரவு வரை தொடர வாய்ப்புள்ளது. எனவே கலந்தாய்வு நடக்கும் இடங்களில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். கடந்தாண்டுகளில் அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருந்தன. கழிப்பிட வசதியில்லாததால் பெண் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர். எனவே கழிப்பறை வசதி, குடிநீர், இருக்கை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித்தர வேண்டும்.*


*🌟அரசாணையில் நிர்வாக மாறுதல் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் எவ்வித காரணமும் இல்லாமல் பழிவாங்கப்பட வாய்ப்புள்ளது. வேண்டிய ஆசிரியருக்கு குறிப்பிட்ட பணியிடத்தை ஒதுக்கவும் வசதி உள்ளது. கலந்தாய்வுக்காக பணப்பரிமாற்றம் நடக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நடக்காமல் இருக்க முதன்மைக்கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும். இது குறித்து வரும் மேல்முறையீடுகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.*


🤝தோழமையுடன்;


*_முத்துப்பாண்டியன்,_*

*மாவட்ட செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*சிவகங்கை மாவட்டம்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: